For Quick Alerts
For Daily Alerts
Just In
செஞ்சி ராமச்சந்திரன் மீண்டும் அமைச்சராகிறார்
புதுடெல்லி:
திருனாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் மதிமுகவின் செஞ்சி ராமச்சந்திரன்ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகின்றனர்.
வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படவுள்ளது. இதில் மம்தாபானர்ஜி மற்றும் செஞ்சி ராமசந்திரன் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர் பதவிகொடுக்கப்படவுள்ளது.
வாஜ்பாய் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் 14-வது மாற்றமாகும் இது. 2 ஆண்டுகளக்குப்பிறகு மம்தா அமைச்சர் பதவிக்கு வருகிறார். அவருக்கு கொடுக்கப்படும் துறை எது என்றுதெரியவில்லை. இருப்பினும் நிலக்கரித்துறை அவருக்க வழங்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, உதவியாளர் லஞ்சம் வாங்கிய வழக்கால், பதவியிழந்த செஞ்சி ராமச்சந்திரனுக்குமீண்டும் நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பே கிடைக்கலாம் என்று தெரிகிறது. இல்லாவிட்டால்ரயில்வே துறைக்கு அவர் மாற்றப்படலாம்.


