எனக்கே லஞ்சமா? கொந்தளித்த ஏ.கே.மூர்த்தி!
சென்னை:
மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியிடம், பதவி உயர்வுக்காக ரூ. 50,000லஞ்சம் கொடுத்த, ரயிலவே நிலைய மாஸ்டரை, போலீஸாரிடம் ஒப்படைத்தார் ஏ.கே.மூர்த்தி.
ஏ.கே.மூர்த்தி, சென்னை எழும்பூர் ரயில் நிலைய முகாம் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்குபலரும் அமைச்சரை சந்தித்து குறைகளைத் தெரிவித்தனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம்மேல்மருவத்தூர் (அமைச்சரின் எம்.பி. தொகுதிக்குட்பட்ட பகுதி) ரயில் நிலைய ஸ்டேஷன்மாஸ்டராக பணியாற்றும் சி.வி.கிருஷ்ணன் என்பவர் அமைச்சரை வணங்கி விட்டு இரண்டு தபால்உறைகளைக் கொடுத்தார்.
அதை வாங்கிப் பிரித்துப் பார்த்த அமைச்சர் மூர்த்தி, உள்ளே பணக் கட்டுக்களும், உதவிஆபரேட்டிங் மேலாளர் தேர்வுக்கான அழைப்புக் கடிதமும் இருந்தது கண்டு திடுக்கிட்டார். அதில் ரூ.50,000 பணம் இருந்தது. என்ன இது என்று கிருஷ்ணனை அவர் கேட்டபோது, எழுத்துத் தேர்வுக்குதனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், அதில் தான் பாஸ் செய்ய உதவி செய்ய வேண்டும் என்றும்கிருஷ்ணன் கூறினார்.
இதனால் கோபமடைந்த அமைச்சர் தனது பாதுகாப்பு அதிகாரியைக் கூப்பிட்டு கிருஷ்ணனைரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்து வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். தனதுநண்பர்கள் தெரிவித்த காரணத்தால்தான் இவ்வாறு செய்து விட்டேன் என்றும் அமைச்சரை தவறாகஎடை போடவில்லை என்றும் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் கெஞ்சினார் கிருஷ்ணன்.
கடன் வாங்கி இந்தப் பணத்தைக் கொண்டு வந்ததாகவும், வேண்டும் என்றே செய்யவில்லை என்றும்அவர் கூறியதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிலர், அமைச்சரை அணுகி கிருஷ்ணனை மன்னித்துவிடுமாறு கோரினர்.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணனை அழைத்த அமைச்சர் மூர்த்தி, இதுதான் கடைசி தடவையாக இருக்கவேண்டும். கனவில் கூட இதுபோல நினைக்கக் கூடாது, முயலக் கூடாது என்று கண்டிப்பாக கூறிஅனுப்பினார்.
சென்னை ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications