இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப தமிழக அரசு கோரிக்கை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமிபிரானேஷ் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.

மத்திய அரசின் அழைப்பை அடுத்து லட்சுமி நேற்று அவரசமாக டெல்லி சென்றதாகவும், மிஸ்ராவை சந்தித்துப்பேசியதாகவும் முன்னதாக தகவல்கள் வந்தன.

ஆனால், தலைமைச் செயலாளர் தான் அப்பாயின்மெண்ட் கேட்டு மிஸ்ராவைச் சந்தித்தாகத் தெரிகிறது. அப்போதுதமிழகத்தில் சுமார் 106 முகாம்களில் வசிக்கும் சுமார் 42,000 இலங்கை அகதிகளை உடனே அவர்களது நாட்டுக்குஅனுப்பி வைக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பு குறித்து மத்திய அரசோ, மாநில அரசோ விவரம் எதையும் தெரிவிக்கவில்லை. சென்னை வரும்பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆலோசனை நடந்ததாகக் கருதப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் அகதிகளாக வாழந்து வரும் குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்புவதுகுறித்தே நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை வரும் வாஜ்பாயை முதல்வர் ஜெயலலிதா வரவேற்கப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்இப்போது தோழி சசிகலாவுடன் ஊட்டியில் உள்ளார்.

த ஹிந்து ஆங்கில நாளிதழ் மீது பல்வேறு அவதூறு வழக்குகளை ஜெயலலிதா தொடர்ந்துள்ளார். இந் நிலையில்அந்த நாளிதளின் 125 ஆண்டு விழாவில் பங்கேற்கவே பிரதமர் வாஜ்பாய் சென்னை வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+