வீரமணியின் 12 கூட்டாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
சென்னை:
சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாதா வீரமணியின் கூட்டாளிகள் 12 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையைக் கலக்கி வந்த அயோத்தி குப்பம் தாதா வீரமணி, கடற்கரையில் நண்பர்களோடுஅமர்ந்திருந்தபோது போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இதைத் தொடர்ந்து அவனது கூட்டாளிகள் வேட்டையாடப்பட்டனர். அவனது தம்பிகள் செல்லமணி,தமிழ்மணி, கலைமணி உள்ளிட்ட 12 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
வீரமணியின் ரெளடி ராஜ்ஜியத்தை இந்தக் கும்பல் தொடர்ந்து நடத்த வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்ததையடுத்து இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ள சென்னை கமிஷ்னர்விஜயகுமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து 12 பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குண்டர் சட்டத்தில்கைது செய்யப்பட்டுள்ளதால் ஒரு வருடத்துக்கு ஜாமீனோ, விசாரணையோ கூட இல்லாமல்இவர்கள் உள்ளேயே வைக்கப்பட்டிருப்பர்.
இதற்கிடையே வீரமணியின் இரண்டாவது மனைவி உதயாவை உளவுப் பிரிவு போலீசார் தொடர்ந்துகண்காணித்து வருகின்றனர். கஞ்சா கடத்தலில் வீரமணிக்கு துணையாக இருந்த பெண் இவள். இவள் தொடர்ந்துசட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால், இவளும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாவாள் என்று போலீஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications