For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணல் கொள்ளையர்கள்: ஜெ.வுக்கு இளங்கோவன் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களாக இருந்தாலும், சட்ட விரோதமாக மணல் கடத்துபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்கோரிக்கை விடுத்துள்ளார்.

முறையான அனுமதியின்றி இயங்கி வந்த கல் குவாரியில் இருந்து லாரியில் கடத்தப்பட்ட கிரனைட்கற்களைத் தடுத்து நிறுத்திய தாசில்தார் புண்ணியகோடியை லாரியை ஏற்றிக் கொன்றது ஒரு கும்பல்.

இது குறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்யிைல், காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்ததாசில்தார் புண்ணிய கோடி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார்.

இதேபோல, கரூர் மாவட்டம் தாராபுரம் ஆற்றிலிருந்து பல லாரிகளில் தினசரி மணல் ஏற்றப்பட்டு கேரளாவுக்குக்கொண்டு செல்லப்படுகிறது. உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவுடனேயே சிலர் இந்த மணல் கொள்ளையில்ஈடுபட்டுள்ளனர்.

இதை கண்டிக்கும் பொதுமக்களை போலீஸார் அடித்து உதைக்கிறார்கள். எனவே, ஆட்சியாளர்களுக்குவேண்டியவர்களாக இருந்தாலும், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கஜெயலலிதா முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தாசில்தார் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம்:

இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட தாசில்தார் புண்ணியகோடியின்குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

வட்டாட்சியர் புண்ணியகோடி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சியுற்றேன். கொலையாளிகளை விரைவில் தேடிப் பிடித்துகடும் தண்டனை வழங்கச் செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மறைந்த புண்ணியகோடியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்குமுதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் இழப்பீடு தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அதிகாரிகள் சங்கம் கண்டனம்:

இதற்கிடையே தாசில்தார் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டதற்கு, தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் அவசரக் கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் சங்கத் தலைவர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,வருவாய் அலுவலர்கள் பணியாற்றும்போது தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.

வருவாய் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X