For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீ வைத்து தற்கொலை
சென்னை:
சென்னையில் மறைந்த தொழிலதிபரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த தொழிலதிபர் சுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு இறந்துவிட்டார்.இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து குடும்பம் பெரும் நிதிநெருக்கடியில் சிக்கியதாகத் தெரிகிறது.
இந் நிலையில் நேற்றிரவு அவரது மனைவி, மாமியார் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து போயுள்ளன. இந்த உடல்கள்ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.


