துருக்கி, அமெரிக்க சுற்று பயணத்தை துவக்கினார் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் இன்று துருக்கி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர் அமெரிக்கா செல்வார்.
அவரது இந்த 13 நாள் பயணத்தில் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திலும் பங்கேற்பார்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடனும் அவர் ஆலோசனை நடத்துவார்.
முன்னதாக டெல்லியில் இருந்து துருக்கி புறப்படும் முன் ஈராக்குக்கு இந்தியப் படைகளை அனுப்புவது குறித்துபுஷ்சுடன் பேசுவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது நேரடியாக பதிலளிக்க பிரதமர் மறுத்துவிட்டார்.
ஈராக்கில் அமைதி காப்புப் பணியில் ஐ.நா. படைகள் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை எடுக்கும் முடிவைப் பொறுத்து எங்களது முடிவும் அமையும்என்றார்.












Click it and Unblock the Notifications