தலைமைச் செயலக ஊழியர்களை இடமாற்றம் செய்ய புதிய ஆணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தலைமைச் செயலக ஊழியர்களை பிற அரசு அலுவலகங்களுக்கும் இடமாற்றம் செய்யும் அரசாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தலைமைச் செயலக ஊழியர்களுக்கு இடமாற்றமே இல்லாமல் இருந்தது. இங்கு வேலையில் சேர்ந்தால்ஓய்வு பெறும் வரை தலைமைச் செயலகத்திலேயே காலத்தை ஓட்டிவிடும் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடந்த அரசு ஊழியர் போராட்டத்தை தலைமைச் செயலக ஊழியர்கள் தான் முன்னின்று நடத்தினர்.இதையடுத்து இந்த ஊழியர்களில் பெரும்பான்மையினரை டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்து பாடம் புகட்டியஅரசு இப்போது அடுத்த அடியைத் தந்துள்ளது.

இதன்படி அவர்களை பிற அரசு அலுவலகங்களும் இடமாற்றம் செய்யும் வகையில் புதிய அரசாணைய அரசுபிறப்பித்துள்ளது.

இதையடுத்து சுமார் 4,500 தலைமைச் செயலக ஊழியர்களை அரசு இனி எங்கு நினைத்தாலும் மாற்ற முடியும்.இதில் 2,500 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நீதிபதிகள் குழுவின் விசாரணையில் ஆஜராகி வருவதுகுறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டாலும், அனைவரும் அதிரடியாக மாநிலத்தின் பல்வேறுபகுதிகளுக்கும் தூக்கி அடிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

தலைமைச் செயலகத்துக்கு ஒட்டுமொத்தமாக புதிய ஊழியர்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.இதனால் மாநிலத்தின் பல்வேறு அலுவலகங்களிலும் பணியாற்றும் சிறந்த ஊழியர்களின் பட்டியல்தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவர்களை தலைமைச் செயலகத்தில் நியமித்துவிட்டு, இங்கு பல்லாண்டுகளாக வேலை பார்த்து வருபவர்கள்மாநிலத்தின் மூலை, முடுக்குகளுக்கு தூக்கி அடிக்கப்படவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+