நாளை தொடங்குகிறது திமுக மாநாடு: பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை நடக்கும்
விழுப்புரம்:
விழுப்புரத்தில் நாளை துவங்கவுள்ள திமுக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாகசெய்யப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுப் பந்தலுக்கு வெட்டிக் கொல்லப்பட்ட முன்னாள்அமைச்சர் பசும்பொன் தா.கிருட்டிணனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பா.ஜ.கவுடனான கூட்டணி தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.முதலில் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே நடத்திவிட பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது.ஆனால், ஏகப்பட்ட எம்.பி. இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால்பா.ஜ.கவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போதைக்கு தேர்தல் வேண்டாம் என அக் கட்சி நினைக்கிறது.
அடுத்த ஆண்டு இறுதியில் தான் தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. இதனால் பா.ஜ.கவிடம் இருந்து உடனடியாகவிலக வேண்டிய அவசரமும் திமுகவுக்கு இல்லை. இருப்பினும் விழுப்புரம் கூட்டத்தில் பா.ஜ.கவை வெளுத்துவாங்கும் வகையில் தலைவர்களின் பேச்சுக்கள் இருக்கும் என்று தெரிகிறது.
திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டே அதிமுகவுடன் நெருக்கம் காட்டுவது, வைகோ விஷயத்தில் ஒன்னும்தெரியாதது போல நடந்து கொள்வது, ஜெயலலிதா-சங்கராச்சாரியார்-பா.ஜ.க. மும்முனைக் கூட்டணி போன்றவிஷயங்களை திமுக தலைவர்கள் முன்னிருத்திப் பேசுவர்.
மொத்தத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி வெளியே வருவதற்கான ஆயத்தப் பணி இந்த மாநாட்டில்துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் திமுகவினர் பங்கேற்க உள்ளனர். இதற்காக பிரம்மாண்டப் பந்தல்அமைக்கப்பட்டுள்ளது. பந்தலில் மொத்தம் 150 தொலைக் காட்சிப்பெட்டிகள், 2 பிரம்மாண்டத் திரைகள்வைக்கப்பட்டு மேடை நிகழ்ச்சிகள் ஒளிபரப்படவுள்ளன.
ஆண்களுக்கு 25 கழிப்பிடங்களும், பெண்களுக்கு 15 கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன .தொண்டர்களுக்காக சைவ, அசைவ உணவு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி தங்குவதற்கென மாநாட்டு மேடைக்கு அருகே கூரை வேயப்பட்ட தனிக்குடில்அமைக்கப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் கூடிய இந்தக் குடிலின் இன்டீரியர் மிக அட்டகாசமாகசெய்யப்பட்டுள்ளது. வழக்கமாக அதிமுக கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தான் இது போன்ற ஸ்பேஷல்வசதிகள் எல்லாம் செய்யப்படும். இப்போது அதை திமுகவும் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையிலான திமுகவினர் கடந்த ஒரு மாதகாலமாக செய்து வந்தனர். அவ்வப்போது துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும் விழுப்புரம் சென்று மாநாட்டுஏற்பாடுகளைப் பார்வையிட்டு வந்தார்.
நாளை பிற்பகல் 3 மணிக்கு மாநாட்டுத் திடலுக்கு உள்ளேயே நடக்கும் தொண்டர்கள் அணிவகுப்பினை கருணாநிதி பார்வையிடுவார். சுமார் 6 மணி நேரம் இந்த அணிவகுப்பு நடக்கும் என்று தெரிகிறது.முதலில் விழுப்புரம் நகரில் இந்த அணி வகுப்பு நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், அனுமதி தர தமிழகஅரசும் போலீசாரும் மறுத்துவிட்டனர்.
3 நாள் மாநாட்டின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை கருணாநிதி நிறைவுரை ஆற்றுவார். இந்த நிலையில்இந்த மாநாட்டுக்குச் செல்ல திமுகவினருக்கு வாகனங்கள் தர வேண்டாம் என அந்தந்தப் பகுதி அதிமுக புள்ளிகள்டிராவல்ஸ் நிறுவனங்களை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.
கட்சியின் முக்கியத் தலைவரான மாறன் மருத்துவமனையில் நினைவின்றி உள்ள நிலையில் நடக்கும் முக்கியமானமாநாடு இதுவாகும்.
மேலும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஸ்டாலின் தான் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கப்போகிறார். வழக்கமாக கட்சித் தலைவர் தான் தலைமை தாங்குவது வழக்கம். ஸ்டாலினுக்கு இந்த வாய்ப்புத்தரப்பட்டுள்ளதன் மூலம் திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்பதை கருணாநிதி மறைமுகமாகதிமுகவினருக்குச் சுட்டிக் காட்டியுள்ளதாக அந்தக் கட்சியினர் கூறுகின்றனர்.
இந்த மாநாட்டில் பொடா விவகாரத்தை திமுக முக்கியமாக கையில் எடுக்கலாம் என்று தெரிகிறது. இந்தச் சட்டத்தைவாபஸ் பெறச் சொல்லி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். மேலும் கூட்டணி குறித்து கட்சியின்மாவட்டச் செயலாளர் திறந்த மனதுடன் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று கருணாநிதி கூறியுள்ளார். இதனால்பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேற மாவட்டத் தலைவர்கள் கருணாநிதிக்கு கோரிக்கை வைக்கலாம் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications