ஸ்பிக் பங்கு ஊழல்: நிதித்துறை செயலர் சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசின் பங்குகள் ஸ்பிக் நிறுவனத்துக்கு விற்கப்பட்டதால் அரசுக்கு நஷ்டம் ஏதும்ஏற்படவில்லை என்று நிதித்துறை செயலாளர் நாராயணன், சென்னை தனி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

ரூ. 28.29 கோடி மதிப்புள்ள டிட்கோ நிறுவன பங்குகளை ஸ்பிக் நிறுவனத்துக்கு விற்றதில் பெரும் ஊழல்நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டவழக்கு தனி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த ஊழல் நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் நிதித்துறை செயலாளராக இருந்த நாராயணன் (இப்போதும்இவர் தான் நிதித்துறைச் செயலாளர்) நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

அவர் கூறுகையிஸ், டிட்கோ நிறுவன பங்குகளை விற்றதில் தமிழக அரசுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை.

ஸ்பிக் நிறுவனத்திற்கு சாதகமான வகையில் டிட்கோ நிறுவன பங்குகளை விற்றது மிகச் சரியான, அருமையானமுடிவாகும். இந்தப் பங்குகளை விற்க முடிவு செய்தபோது, மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம், உணவு மானியம் ஆகியவை வழங்க வேண்டியிருந்ததால், வேறு வழியின்றி தான்பங்குகளை விற்க நேர்ந்தது.

பங்குகளை விற்றதில் அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டன. தலைமைச் செயலாளன்அனுமதி பெற்ற பின்னர்தான் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

எனவே, பங்குகளை விற்றதில், டிட்கோவோ, தமிழக அரசோ நஷ்டத்தில் மூழ்கி விடவில்லை என நாராயணன்சாட்சியம் அளித்தார்.


இந்த வழக்கில் வரும் 26ம் தேதி தொடர்ந்து விசாரணை நடக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+