ஜெவை சந்திக்க நேரம் கேட்கிறார் சோ.பா
சென்னை:
கோயம்பேடு வணிக வளாக நிலத்தை தனியாருக்கு விற்றதில் மாநகராட்சி அதிமுக கவுன்சிலரும், நகரவடிவமைப்பு குழு தலைவருமான வெற்றிவேல் ரூ. 25 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளது குறித்து புகார்கொடுக்க நேரம் ஒதுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன்.
இதுதொடர்பாக ஜெயலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோ.பா. கூறியிருப்பதாவது:
கோயம்பேடு வணிக வளாகத்திற்கு அருகே உள்ள 33 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு விற்றதில் முறைகேடுகள்நடந்துள்ளன. இதில் ரூ. 25 கோடி அளவுக்கு முறைகேடுகளை செய்துள்ளார் கவுன்சிலர் வெற்றிவேல்.
இதுதொடர்பாக சமீபத்தில் மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாரை சந்தித்து, காங்கிரஸ் கவுன்சிலர்கள் புகார்கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பாக நேரில் சந்தித்து விளக்கநேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரசில் இருந்து அதிமுகவுக்குத் தாவியவர் வெற்றிவேல் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications