சென்னையில் திடீர் கன மழை: சாலைகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு
சென்னை:
சென்னையில் நேற்றிரவு திடீரென கன மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் தேங்கியதண்ணீரால் இன்று காலை ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னை நகரை வெயில் கொளுத்தி வந்தது. செப்டம்பர் மாதமாக இருந்தாலும் கூட, கோடை காலத்தைப் போலவெயில் மக்களை உருக்கி எடுத்து வந்தது. இதனால் மக்கள் மண்டை காய்ந்து போயிருந்தனர்.
இந் நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் மழை பெய்ய ஆரம்பித்தது. இது பின்னர் கன மழையாக மாறி, சுமார் 4மணி நேரத்திற்கு விடாமல் பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளப் பெருக்குஏற்பட்டது.
சுரங்கப் பாதைகளில் வெள்ளம்:
முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடியது. அண்ணா சாலை உள்ளிட்ட க்கிய சாலைகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் அதை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
வீடு இடிந்தது:
அமைந்தகரை பகுதியில் மழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
சரியான முறையில் கால்வாய்கள் அமைக்கப்படாத காரணத்தால், பல பகுதிகளில் மழை நீர் வெளியேறாமல்உள்ளது. இதனால் இன்று காலை முதல் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக துரைப்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம் ஆகிய புறநகர்ப் பகுதிகளில் மழை நீர்தெப்பமாக தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.சென்னை தவிரதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், கர்நாடகம், ஆந்திரத்திலும் நேற்றிரவு முதல் மேகமூட்டம்சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே கன மழையும் பெய்து வருகிறது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications