பழிக்குப் பழி: கோர்ட்டில் ஆஜராக வந்த 2 பேர் லாரி ஏற்றிக் கொலை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

கொலை வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருந்த 2 பேர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இதே பகுதியைச் சேர்ந்தவர்முத்துராமலிங்கம். கடந்த ஆண்டு இங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அருணாச்சலமும், முத்துராமலிங்கமும்போட்டியிட்டனர்.

போட்டியிலிருந்து வாபஸ் பெறுமாறு அருணாச்சலத்தை, முத்துராமலிங்கம் மிரட்டியுள்ளார். ஆனால்அருணாச்சலம் மறுத்து விட்டார்.

அருணாச்சலத்துக்கு ஆதரவாக அவரது தம்பி விநாயகம் என்பவர் கடுமையாக தேர்தல் பணியாற்றினார்.இறுதியில் அருணாச்சலமே தேர்தலில் வெற்றி பற்றார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம், அருணாச்சலத்தின் வெற்றிக்குக் காரணமான விநாயகத்தை கொலைசெய்தார். இது தொடர்பாக முத்துராமலிங்கம், முருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுஅனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ஜாமீனில் வந்த அவர்கள் நேற்று இந்த வழக்கில் ஆஜரவாதற்காக காரில் தூத்துக்குடி முதலாவது விரைவுநீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் வந்த கார் பாளையங்கோட்டை சாலையில், அந்தோணியாபுரம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்தலாரி மிக பயங்கரமாக மோதியது.

இதில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துராமலிங்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்வழியில் இறந்தார். மேலும் காரில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

பழிக்குப் பழி வாங்கும் வகையில் அருணாச்சலம் தரப்பினர்தான் லாரியை ஏற்றி இந்த கொலைகளைசெய்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

-->Mail this to a friend  Post your feedback  Print this page 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+