தலித் பெண்ணை மலம் உண்ண வைத்த கொடுமை: கலெக்டர் நேரில் விசாரணை
மதுரை:
மதுரை மாவட்டம் கீழ உரப்பனூர் கிராமத்தில் தலித் பெண்ணின் வாயில் மலம் கலந்த நீரை ஊற்றி அதை குடிக்கவைத்து அவமானப்படுத்திய சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் சந்திரமோகன் நேரில் விசாரணை நடத்தினார்.
தப்பி வந்த முத்துமாரி இது தொடர்பாக பஞ்சாயத்தில் புகார் கூற முடிவு செய்திருந்த நிலையில், ராஜுமற்றும் அவரது மனைவி விஜயா உள்ளிட்ட அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்துமுத்துமாரியையும் அவரது கணவர், குழந்தைகளைத் தாக்கினர்.
முத்துமாரியின் வாயில், மலம் கலந்த நீரை ஊற்றி பெரும் கொடுமையைச் செய்தனர். இதனால் வாழ்க்கையேவெறுத்துப் போயுள்ள முத்துமாரி எதையும் உண்ணவே மறுத்து வருகிறார். தற்கொலை செய்து கொள்ளும்சிந்தனையிலும் உள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த முத்துமாரியின் உறவினர், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.முதலில் புகாரை வாங்க மறுத்து முத்துமாரி குடும்பத்தினரையே திட்டிய பேசிய போலீசார் பின்னர் புகாரை வாங்கிக்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தால் நிலை குலைந்து போன முத்துமாரியின் குடும்பம் ஊரை விட்டே வெளியேறியது.போலீசாரிடம் புகாரைத் தந்த பின்னரே தனது சொந்த ஊருக்குத் திரும்பினார் முத்துமாரி.
இந்த விவகாரம் மனித உரிமைக் கமிஷனுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பீப்பிள்ஸ் வாட்ச் என்ற சமூகசேவை நிறுவனமும் இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.
விவகாரம் பெரிதாவதை உணர்ந்த தமிழக அரசு இது குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டருக்குஉத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் கீழ உரப்பனூர் கிராமத்திற்கு சென்று விசாரணைமேற்கொண்டார். அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி (ஆர்.டி.ஓ) அன்பழகனும் சென்றார்.
அவர்களிடம் விஜயா தனது வாயில் மலம் கலந்த நீரை ஊற்றியதை கதறியபடி கூறினார் முத்துமாரி.
இருப்பினும் உயர் ஜாதியைச் சேர்ந்த மற்றவர்கள் தன்னிடம் தவறாக நடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.இந்த விஷயத்தில் அவர் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த ஆர்.டி.ஓவுக்கு ஆட்சித் தலைவர் சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார்.
சக பெண்ணின் வாயில் மலத்தை ஊற்றிய மிருகம் விஜயா தலைமறைவாகி விட்டார். இந்தச் சம்பவத்தால் கீழஉரப்பனூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதையடுத்து அந்த ஊரில் தலித்கள் வசிக்கும் காலனிப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன? -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம்












Click it and Unblock the Notifications