Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்பத்தோடு முன் ஜாமீன் கோரும் துணைவேந்தர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Daughter in law Sangeethaசெக்ஸ் மற்றும் வரதட்சணைக் கொடுமைப் புகாருக்கு ஆளாகியிருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெயார் பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மீது அவரது மருமகள் சங்கீதா சமீபத்தில் செக்ஸ்புகார் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சங்கீதா தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரியய்யாவிடம்

கொடுத்துள்ள புகாரில்,

கிருஷ்ணகிரியை அடுத்த மோரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த எனக்கும், சேலம் பெரியார் பல்கலைக்கழகதுணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேல் சேதுபதிக்கும் திருமணம் நடந்தது. திருமணமான ஒருவாரத்தில் எனது கணவர் ராஜவேல் சேதுபதி அமெரிக்கா சென்று விட்டார்.

திருமணத்திற்குப் பின் நான் எனது மாமனாரின் வீட்டில் தங்கினேன். அப்போது அடிக்கடி என்னிடம் தவறாகநடக்க முயன்றார் என மாமனார். எனது மாமியார், கோவையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விடுவார்.அவர் சென்ற பின்னர், என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.

தனது அறைக்கு அழைத்து என் சேலையைப் பிடித்து இழுத்தார். பாலியல் பலாத்காரம் செய்ய பலமுறை முயற்சிசெய்தார். இதை நான் கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்தபோது, அவரும் கண்டுகொளளவில்லை. மேலும்என் கணவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற விவரமும் என்னிடம் மறைக்கப்பட்டது.

VC Sethupathi Ramalingamமாமனாரின் தொல்லைகள் மிகவும் அதிகரித்தால், இது குறித்து நான் என் வீட்டில் புகார் கூறினேன். அவர்கள் இதுதொடர்பாக என் கணவர் வீட்டாரிடம் பேசினர்.

இதையடுத்து எனது நாத்தனார் டாக்டர் மீனாட்சி அனுராதா மற்றும் அவரது கணவர் டாக்டர் பரமேஸ்வரன் மற்றும்என் மாமியார் ஆகியோர் வரதட்சணையாக ஒரு காரும், ரூ. 2 லட்சம் பணமும் வாங்கி வர வேண்டும் என்று மிரட்டஆரம்பித்தனர்.

என்னை பாலியல்ரீதியில் தொல்லைப்படுத்திய மாமனார், வரதட்சணைக் கேட்டு துன்புறுத்திய மாமியார் ஜோதி,நாத்தனார், அவரது கணவர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என் கணவருடன் என்னை சேர்த்து வைக்கவும் உதவ வேண்டும் என்று கோரியுள்ளார் சங்கீதா.

இதையடுத்து துணை வேந்தர் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. அவரைக் கைது செய்யவேண்டுமானால் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ராம்மோகன் ராவுக்கும் தகவல் தரப்பட வேண்டும். அந்தநடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து துணை வேந்தர் சேதுபதி ராமலிங்கம், அவரது மனைவி ஜோதி, அமெரிக்காவில் வசிக்கும் மகன்ராஜவேல் சேதுபதி, மகள் டாக்டர் மீனாட்சி அனுராதா, அவரது கணவர் டாக்டர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், மருமகள் சங்கீதா மன நிலை சரியில்லாதவர் என்றும், அவரது புகாரின்பேரில் தாங்கள் கைதுசெய்யப்படலாம் என்பதால் முன் ஜாமீன் தர கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+