Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாமீன் ரத்தானது: மீண்டும் சிறைக்குப் போகிறார் சரவண பவன் அண்ணாச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஹோட்டல் சரவண பவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சரவண பவன் ஹோட்டலில் வேலை பார்த்த மேனேஜரின் மகளான ஜீவஜோதியின் மீது கண் வைத்தார்அண்ணாச்சி. ஜீவஜோதிக்கும் அவருக்கும் இடையே தொடர்பும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ஆள் வைத்துக் கடத்தி கொடைக்கானலுக்குக் கொண்டுசென்று கொலை செய்து மலையிலிருந்து உருட்டி விட்டதாக வழக்குப் பதிவாகியுள்ளது. இந்தக் கொலையில்அண்ணாச்சி ராஜகோபால் தான் முக்கியக் குற்றவாளியாவார். இந்த வழக்கில் இப்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

இந்தக் கொலைக்குப் பின் ராஜகோபால்- ஜீவஜோதி உறவு முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ஆனாலும்,இவர்கள் இருவர் இடையிலும் உறவு தொடர்வதாகவும் இன்னும் பேச்சு உள்ளது. ஜீவஜோதியின் மாமாக்கள் இதைவைத்தே அண்ணாச்சியிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் வேதாரண்யம் அருகே தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஜீவஜோதியைதனது வழக்கறிஞருடன் சென்று சந்தித்தார் ராஜகோபால். அப்போது ஜீவஜோதியை கடத்த வந்ததாக ராஜகோபால்மீது அவரது மாமாக்கள் புகார் தந்தனர்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், அவர் கடத்தச் செல்லவில்லை என்றும், வழக்கம்போல் சந்திக்கவே சென்றதாகவும் அப்போதுஅண்ணாச்சியிடம் நிறைய பணத்தை ஜீவஜோதியின் மாமாக்கள் கேட்டதாகவும், அதைத் தர அண்ணாச்சிமறுத்தபோது ஜீவஜோதியை கடத்த வந்ததாகக் கதை கட்டியதாகவும் ராஜகோபால் தரப்பில் கூறுகின்றனர்.

இந்த கடத்தல் வழக்கு விசாரணை நாகப்பட்டனம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ராஜகோபாலுக்கு இந்தநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந் நிலையில் இந்த ஜாமீனை எதிர்த்து அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

அந்த மனுவில், பொருளாதார பலம், ஆள் பலம் கொண்ட ராஜகோபால் ஜாமீனில் விடப்பட்டால் சாட்சிகளைகலைத்து விடுவார் என்பதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு கூறியிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம், ராஜகோபாலுக்கு வழக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யஉத்தரவிட்டார். மேலும் ராஜகோபாலை உடனடியாக கைது செய்து, இந்தக் கடத்தல் வழக்கு முடியும் வரைசிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+