Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி: பொங்கலன்று தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானப்பணி, பொங்கல் தினமான, வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி தொடங்கவுள்ளது.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ளது. இதற்கானடெண்டர்கள் விடப்பட்டன. இதில் 6 நிறுவனங்கள் கட்டட வடிமைப்புடன் விண்ணப்பித்தனர்.

இதில் ஒரு நிறுவனம் சமர்பித்த வடிவமைப்பை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தேர்வு செய்து அரசிடம்வழங்கியது. இந்த கட்ட வடிவமைப்பை நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டம் இறுதி செய்தது. அந்தநிறுவனத்தைக் கொண்டே தலைமைச் செயலகத்தைக் கட்டவும் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றார் முதல்வர்ஜெயலலிதா.

இதன் கட்டுமானப் பணிகள் ஜனவரி 14ம் தேதி, பொங்கல் தினத்தன்று தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கானஅறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தரைத் தளம் உள்பட 6 தளங்களுடன் இந்த புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்படவுள்ளது. இங்குஹெலிபேடும் அமைக்கப்படவுள்ளது.

மேலும், மகாபலிபுரம் சாலையில் புதிய நிர்வாக நகரம் அமைப்பது குறித்தும் நேற்றைய அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முன் பணம்:

இந் நிலையில் டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தவிர மற்றவர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் ரூ. 1,000 தீபாவளி முன் பணமாக வழங்கப்படும். இந்தக் கடனை வட்டியில்லாமல்மாதந்தோறும் அரசுக்கு ஊழியர்கள் திருப்பிச் செலுத்தலாம்.

இந்த ஆண்டு இந்த முன் பணம் கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியதாய் இருந்தது. ஆனால், முன் பணம் வழங்க அரசு முடிலுசெய்துள்ளதாகத் கூறப்படுகிறது.

இருப்பினும் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டு டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 பேருக்கு இந்தப் பணம் வழங்கப்படமாட்டாது.

தீபாவளி போனஸ் குறித்து, இந்த ஆண்டு அரசு ஊழியர்கள் எந்தப் பேச்சும் கிளப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-->Mail this to a friend  Post your feedback  Print this page 
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+