For Daily Alerts
Just In
பத்தே நிமிடங்களில் முடிவடைந்த அமைமச்சரவைக் கூட்டம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டம் பத்தே நிமிடங்களில் முடிவடைந்தது.
தலைமைச் செயலக சீரமைப்பு குறித்து பொன்னையன் குழு அறிக்கை மற்றும் அரசு ஊழியர் மற்றும் நிதி சீரமைப்புக்கமிட்டி அறிக்கை தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், புதிய தலைமைச் செயலகத்துக்கான வரைபடத் தேர்வு மட்டுமே இன்றைய கூட்டத்தில் நடந்தது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அரசுஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, ஓய்வு பெறும் வயது குறைப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்துவிவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.
பகல் 1 மணிக்குக் கூடிய அமைச்சரவை 1.10க்கு முடிவடைந்தது. பின்னர் 1.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை புறப்பட்டார்.

