7 மாணவிகளின் டி.சியில் விளையாடிய பழனி கல்லூரி முதல்வர்: நீதிமன்றத்தில் வழக்கு
பழனி:
பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவிகளின் மாறுதல்சான்றிதழில் (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்- டி.சி.), அவர்களின் நடத்தை குறித்து மிகவும் மோசமான குறிப்பு இடம்பெற்றுள்ளதை எதிர்த்து, அந்த மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்தக் கல்லூரியின் மாணவிகளை கல்லூரியின் சில நிர்வாகிகள், சில பேராசிரியைகள் பாலியல்ரீதியில் தவறாகநடந்து கொள்ளத் தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு தேசிய மதிப்பீட்டுக் கவுன்சில் உறுப்பினர்கள் ஆய்வுக்காக வந்தபோது,அவர்களிடம் நல்ல பெயர் வாங்கவும், கல்லூரியின் அந்தஸ்தை உயர்த்தும் வகையில் கிரேட் வாங்கவும் சிலமாணவிகளை, அவர்களுக்கு கல்லூரி நிர்வாகமே தாரை வார்த்ததாக புகார் எழுந்தது.
தேசிய மதிப்பீட்டு கவுன்சில் உறுப்பினர்களை மகிழ்விக்க மாணவிகள் சிலரை, கல்லூரி நிர்வாகமும் சிலபேராசிரியைகளும் இணைந்து பாலியல்ரீதியிலான உறவுக்கு உட்படுத்தியாகக் கூறப்பட்டது.
இந்தப் புகார் தமிழகத்தையே உலுக்கியது. அரசியல் கட்சிகளும், கல்லூரி மாணவிகளும், கல்லூரி நிர்வாகத்திற்குஎதிராக பெரும் போராட்டத்தில் இறங்கினர். இதுகுறித்து விசாரிக்க அரசு குழு அமைத்தது.
விசாரணை நடத்திய குழு, அதுபோல செக்ஸ் மோசடி எதுவுமே நடக்கவில்லை என்று கூறிவிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மாணவ-மாணவிகளின் போராட்டம் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது.
இந் நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட இந்தக் கல்லூரி மாணவிகளில் பலர் தங்களது பட்டப் படிப்பைமுடித்துள்ளனர். படிப்பை முடித்துக் கிளம்பிய மாணவிகளில் 7 பேர் தங்களுக்குத் தரப்பட்ட டி.சியைப் பார்த்தபோதுமயக்கம் வராத குறைதான்.
அந்த மாணவிகளின் டி.சியில் அவர்களது நடத்தை குறித்து முதல்வர் சந்திரகாந்தா மிக மட்டமாக எழுதியுள்ளார்.
முதல்வர் சந்திரகாந்தா கையெழுத்திட்டுள்ள இந்தச் சான்றிதழில்,
இந்த மாணவி கல்லூரிக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டி விட்டவர். பொய்யான, வதந்திகளை கல்லூரிமாணவிகளுக்கிடையே பரப்பி விட்டு, கல்லூயின் மதிப்பு கெடும் வகையில் வேலை நிறுத்தத்தில் இறங்கியவர்.கல்லூரியின் பெருமை, புகழைக் குலைக்கும் வகையில், உண்மைக்குப் புறம்பான முறையில் செயல்பட்டவர் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
7 பேரின் டிசியிலும் இதே போல எழுதியுள்ளார் சந்திரகாந்தா. இவர் மதுரை அதிமுக முக்கியப் புள்ளியின்சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரகாந்தாவின் இந்தச் செயலை எதிர்த்து 7 மாணவிகளும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
7 மாணவிகளில் ஒருவரான கெளசல்யா என்பவர் எம்.எஸ்.சி உயிரியல் படித்தவர். இவர் 74 சதவீதமதிப்பெண்களைப் பெற்று முதல் வகுப்பில் தேறியுள்ளார். டி.சி. விவகாரத்தால் தற்போது எம்.பில் படிக்க முடியாதநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மாணவிகளை செக்ஸில் ஈடுபடுத்தியதாக போராட்டம் நடந்த காலத்தில் இந்தக் கல்லூரியின் விடுதி குறித்தும் பலமோசமான புகார்கள் வந்தன. இரவு நேரத்தில் கார்கள் வருவதும், கல்லூரிக்குத் தொடர்புள்ள முக்கிய புள்ளிகள்வந்து மாணவிகளை அழைத்துச் செல்வதும் உண்டு என்றும் புகார் கூறப்பட்டது.
ஆனால், இவை எதுவுமே உண்மையமல்ல. எல்லாமே சில மாணவிகள் பரப்பிய பொய்யான தகவல்கள் என அரசுஅமைத்த விசாரணைக் குழு கூறிவிட்டது.
போராட்டம்


