மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
தூத்துக்குடி:
இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதை தமிழக மீனவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றுதூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை கடல் எல்லைக்குள் இந்தியப் படகுகள் அடிக்கடி வந்து, மீன்பிடிப்பதாக இலங்கை இந்திய தூதரகத்திடம், அந்நாட்டு அரசு அடிக்கடி புகார் கூறி வருகிறது.
சில படகுகள் இலங்கை அகதிகளை ஏற்றிக் கொண்டு வருவதாகவும், போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும்இலங்கை புகார் கூறுகிறது.
இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் நமது மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைதுசெய்து செல்கிவதால், இந்திய மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும்.
சில மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைவதாகவும் இந்திய கடலோர பாதுகாப்புப் படை கூறுகிறது.எனவே மீனவர்கள் தங்களது உயிரையும், உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இலங்கை கடல்எல்லைக்குள் நுழைவதைத் தவிர்கக வேண்டும்.
அரசு விதித்துள்ள விதிறைகளுக்குக் கட்டுப்பட்டு மீறி நடக்கும் மீனவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ 5000 வரைஅபராதம் விதித்து அவரிகளது உரிமம் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படும்.
இதேபோல, தொடர்ந்து ஐந்தாவது முறையாக பிடிபடும் மீனவர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்என்று கூறியுள்ளார் அவர்.

