27ம் தேதி சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பம்?
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 27ம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது.
தமிழக சட்டசபையின் குளிர் காலக் கூட்டத் தொடர் வழக்கமாக தீபாவளியை ஒட்டி தொடங்கும். இம்முறைதீபாவளிக்கு அடுத்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களும் விடுமுறை நாட்களாக இருப்பதால், 27ம் தேதிதிங்கள்கிழ கூட்டத் தொடர் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வார காலத்திற்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்அமல்படுத்தப்பட்ட பல்வேறு அவசரச் சட்டங்களுக்கு சபையின் ஒப்புதல் பெறப்படும்.
பொடா சட்ட பிரயோகம், கெளர ரேசன் கார்டு, ஆடு, கோழிகளை கோவில்களில் பலியிடத் தடை, அரசு ஊழியர்போராட்டம், டிஸ்மிஸ்கள் உள்ளிட்ட பல்வேறு சூடான பிரச்சினைகளை இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர்சந்திக்கும்.
இதனால் குளிர்காலக் கூட்டத் தொடர் மிகவும் சூடாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.












Click it and Unblock the Notifications