பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து: கிராம மக்களின் வேட்பாளர் வெற்றி- பதவியில் நீடிப்பாரா?
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் தலித் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கிராம மக்கள் சார்பில்நிறுத்தப்பட்ட வேட்பாளர் அழகரி சாமி வெற்றி பெற்றார்.
பாப்பாபட்டி உள்ளிட்ட தமிழகத்தில் காலியாக உள்ள 4 தலித் பஞ்சாயத்துக்களுக்கு தேர்த்ல் அறிவிக்கப்பட்டது.ஆனால், தேவர் சமூகத்தினரின் மிரட்டலால் பாப்பாபட்டி தவிர மற்ற இடங்களில் தலித்கள் போட்டியிடவில்லை.
பாப்பாபட்டிக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
பாப்பாபட்டியில் கிராம மக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட அழகர்சாமி வெற்றி பெற்றார். இருப்பினும் பதவியேற்றகையோடு இவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்று தெரிகிறது.
கடந்த முறையும் இந்த தலித் பஞ்சாயத்துகளில் வென்றவர்கள் பதவியை விட்டு விலகியதோடு ஊரை விட்டேவெளியேறிவிட்டனர். இல்லாவிட்டால் அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
இது தவிர தமிழகம் முழுவதும் 20 உள்ளாட்சிகளிக்கு நடந்த தேர்தலில் 14 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.அதிமுக 6 இடங்களில் தான் வென்றுள்ளது. காஞ்சி, சோழிங்கர், ராமநாதபுரம், விழுப்புரம், திருவள்ளூர்,திண்டுக்கல், நாகை, நாமக்கல்,கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உஊராட்சி, ஒன்றிய அளவிலான 14பதவிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக வென்றுள்ளது.
பெரம்பலூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சக்தி, அதிமுக வேட்பாளரை விட700 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டுள்ளது.
அதே போல ஆம்பூர், வல்லம், மதுரை, உடன்குடி, ஆறுமுகநேரி ஆகிய இடங்களில் மாநகராட்சி, ஊராட்சிபதவிகளில் 6 இடங்களில் அதிமுக வென்றுள்ளது.
பெரம்பலூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சக்தி, அதிமுக வேட்பாளரை விட700 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications