இட ஒதுக்கீட்டில் கை வைக்கக் கூடாது- பா.ஜகவுக்கு கருணாநிதி அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதாகக் கூறி, ஏற்கனவே உள்ள பிற்படுத்தப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டில் கை வைத்து விடக் கூடாது என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர்கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார அடிப்படையில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும்தான் இட ஒதுக்கீடு என அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. புதியஇட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அரை சதவீதம்இழப்பு ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

வேண்டுமானால் இவர்களுக்குப் போக பொதுத் தொகுப்பில் மீதி உள்ள சதவீதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவைபொருளாதாரத்தில் பலவீன நிலையில் இருப்போருக்கு இட ஒதுக்கீடு செய்யலாமா என்ற யோசிக்கலாம்.

இந்த சலுகையை சட்டத்தின் பாதுகாப்புடன் நடைமுறைப்டுத்துவது பற்றி ஆலோசிக்கலாமே தவிர ஏற்கனவேஅரசியல் சட்டத் திருத்தத்தின்படி மக்கள் பெற்று வரும் சமூக - கல்வி ரீதியான இடஒதுக்கீட்டுப் பயனுக்கு துளியும்ஊனம் விளைவித்து விடக்கூடாது.

ஏற்கனவே பொருளாதாரரீதியில் பள்ளத்தில் கிடப்போருக்கு உதவலாம், அதற்காக பிச்சையெடுத்ததாம்பெருமாள், அதை பிடுங்கியதாம் அனுமார் என்ற பழமொழியைப் போல இட ஒதுக்கீட்டினை ஏற்கனவேபோராடிப் பெற்று அனுபவித்து வருகிற பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின்பங்கில் கை வைக்கக் கூடாது என்றார் கருணாநிதி.

புதிய இட ஒதுக்கீடு: ராமதாஸ் எதிர்ப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இது குறித்து கூறுகையில்,

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பலவீன நிலையில் இருப்பவர்களுக்கு அரசியல் சட்டத்தின் படி இடஒதுக்கீடு வழங்குவது நடைமுறையில் சாத்தியமல்ல. இது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு எதிரானதாகும் என்றார்.

பொருளாதாரத்தில் பலவீனமானவர்கள் எல்லா வகுப்பிலும் இருப்பதால் இட ஒதுக்கீட்டை ஏழ்மையுடன்தொடர்புபடுத்துவது சரியல்ல. எனவே பா.ம.க. இதை எதிர்க்கிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+