விழி பிதுங்கும் அரசு: பண்ணையார் மீது புகார் கொடுத்த சமீரை கைது செய்ய முடிவு
கொழும்பு:
நாடார் சமூகத்தினரின் முக்கியஸ்தரான தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையார் விவகாரத்தில் அந்தசமூக மக்களிடையே நன்றாக சிக்கி விழி பிதுங்கிக் கொண்டுள்ளது தமிழக அரசு.
பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி வரும்செவ்வாய்க்கிழமை ஒரு நாள் தமிழகம் முழுவதிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நாடார் சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.
தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கான நாடார் இன பிரமுகர்களும் பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர்.
இதையடுத்து டேமேஜ் கண்ட்ரோலில் இறங்கியுள்ள அரசு, பண்ணையார் மீது புகார் தந்ததாகக் கூறப்படும்சமீரைக் கைது செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
சென்னையில் ஒரு மோசடி நிதி நிறுவனம் (இதில் கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர், மற்றும் ஆளும்கட்சியின் நம்பர் டூ குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கும் முதலீடு இருப்பதாக அரசல் புரசல் செய்திகள் வருகின்றன)நடத்தி வரும் கேரளத்தைச் சேர்ந்த நிழல் ஆசாமி சமீர் என்பவர் தான் வெங்கடேச பண்ணையார் மீது கடத்தல்புகார் தந்ததாக போலீசார் கூறினர்.
சமீரைக் கடத்தி வைத்து ரூ. 75 லட்சம் வரை கேட்டு வெங்கடேச பண்ணையார் மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்தபோலீசார் அந்த வழக்கில் பண்ணையாரைப் பிடிக்கப் போனதாகவும் அப்போது பண்ணையார் தங்களைத் தாக்க,பதிலுக்கு தாங்கள் சுட்டதில் அவர் பலியானதாக போலீஸ் கூறுகிறது.
ஆனால், இதை நாடார் சமூகத்தினர் நம்ப மறுக்கின்றனர். கோடிக்கணக்கான சொத்தும், பணமும், செல்வாக்கும்கொண்டவர் பண்ணையார். மாதம் பல லட்சம் செலவிடுபவர். ரூ. 75 லடசத்துக்காக யாரையும் கடத்த வேண்டியஅவசியமே அவருக்கு இல்லை என்கின்றனர்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் நாடார் இன மக்களை அதிமுகவுக்கு வாக்களிக்க வைத்ததில் முக்கிய பங்குவகித்தவர் வெங்கடேச பண்ணையார். இதன் மூலம் அதிமுகவின் நம்பர் டூவுக்கும் மிகவும் நெருக்கமானார்.
வெங்கடேச பண்ணையாரின் நண்பர் பெப்சி முரளி என்பவருக்கு சமீரின் நிதி நிறுவனம் ரூ. 1 கோடி தர வேண்டிஇருந்ததாகவும், அதைக் கேட்டுச் சென்றபோது சமீர் தரப்பினர் வெங்கடேச பணணையாரை மிரட்டியதாகவும்தெரிகிறது.
இதையடுத்து சமீர் தரப்பை பண்ணையார் மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து நம்பர் டூ கூப்பிட்டு எச்சரித்தும்கூட தனது நண்பருக்காக தொடர்ந்து சமீருடன் மோதியுள்ளார் பண்ணையார்.
இதைத் தொடர்ந்து சமீர் தனது உறவினரான கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் மூலமாக தமிழக போலீசுக்குநெருக்குதல் தந்ததாகவும், கூடவே நம்பர் டூவும் உத்தரவு தந்ததால் போலீசார் பண்ணையாரை போட்டுத்தள்ளியதாகவும் பண்ணையாரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
பண்ணையாருக்கு நெருக்கமாக இருந்த ஒரு நாடார் இன அமைச்சரும் தன்னை சந்திக்கும் நாடார் இனத்தினரிடம்நம்பர் டூவையே இந்தக் கொலைக்குக் காரணமாக சுட்டிக் காட்டி வருகிறாராம்.
இந் நிலையில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தையும் அணுகவும், பா.ஜ.க. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலம் மத்திய அரசுக்கும் நெருக்குதல் தரவும் திட்டமிட்டுள்ளனர் நாடார் சமூகத்தினர்.
பண பலமும், பத்திரிக்கைகளின் (பெரும்பாலான தமிழக முன்னணி பத்திரிக்கைகள் நாடார் சமூகத்தினருக்குசொந்தமானவை) பலமும் கொண்ட நாடார் சமூக மக்களிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளது அதிமுக.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் மீது கடுப்பில் உள்ள பிரதமர் வாஜ்பாய் சிபிஐ விசாரணைக்கு உத்தரவுபிறப்பித்துவிட்டால் சமீருக்கும் நம்பர் டூவுக்கும் உள்ள பிஸினஸ் தொடர்புகள், சமீரின் மோசடிகள்ஸ மேலும்முன்னாள் கேரள ஆளுநரின் தலையீடு ஆகியவையும் வெளிச்சத்துக்கு வந்துவிடலாம் என்பதால் விழி பிதுங்கிப்போயுள்ளது ஆளும் கட்சி வட்டாரம்.
இதனால் ஏதாவது செய்து விவகாரத்தின் சூட்டைத் தணிக்க முடியுமா என்று யோசித்த தமிழக அரசு, சமீர் ஒருமோசடிப் பேர்வழி என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக இப்போது கூறியுள்ளது.
விரைவில் சமீர் கைது செய்யப்படுவார் என்று சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் ஜார்ஜ் மூலமாகஅரசு செய்தி வெளியிட்டுள்ளது. வழக்கமாக இது போன்ற செய்திகளை கமிஷ்னர் தான் வெளியில் சொல்வார்.
ஆனால், பண்ணையார் கொலையில் கமிஷ்னர் விஜய்குமார் மீது நாடார்கள் பெரும் கடுப்பில் இருப்பதாலும்,மலையாளி என்பதால் கேரளத்தைச் சேர்ந்த மாஜி ஆளுநருக்கு சாதகமாக இவர் செயல்பட்டதாகவும் நாடார்சமூகத்தினர் கூறி வருவதால் ஜார்ஜ் மூலமாக தமிழக அரசு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், வெங்கடேச பண்ணையார் மீது ஏராளமான வழக்குகள்உள்ளன. இவற்றில் 4 வழக்குகளில் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அவர் மீதான வழக்குகளில் ஆதாரத்தைத் திரட்ட 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெங்கடேச பண்ணையார் மீது சென்னையில் சமீர் என்ற தொழிலதிபர் புகார் கொடுத்திருந்தார்.
விசாரணையின்போது அவர் மீது ரூ. 70 லட்சம் மோசடி வழக்கு பதிவாகியிருந்தது தெரியவந்தது(!). இதையடுத்துஅவர் தலைமறைவாகி விட்டார் (!!). அவரைத் தேட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன (!!!). விரைவில் அவர்கைது செய்யப்படுவார் என்றார்.
கவர்னரிடம் புகார்:
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தக் கோரி ஆளுநர்ராம்மோகன் ராவிடம் நாடார் இன பிரமுகர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் இவர்கள் ராம்மோகன் ராவை சந்தித்தனர்.அவர்கள் தந்த மனுவில், தனது குடும்பச் சொத்தில் சுமார் 1,000 ஏக்கரை தூத்துக்கிடி அடாமிக் எனர்ஜி மற்றும்தூத்துகுடி துறைமுக விரிவாக்கத்திற்கு வழங்கியவர் வெங்கடே பண்ணையார். இது தவிரவும் அவரிடம்ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது.
இதனால் அவர் பணத்துக்காக ரெளடித்தனம் செய்ய வேண்டிய நிலையில் இல்லை. நாடார் மக்களுக்கு பாதுகாப்புஅரணாக விளங்கியவர். பல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கும் நெருக்கமானவராக இருந்தார்.
அவரை ரெளடி என்று சொல்லி போலீசார் சுட்டுக் கொன்றிருப்பது துக்ககரமான நிகழ்ச்சி. இதில் பல்வேறுசந்தேகங்களும் எழுந்துள்ளன. இதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை நீங்கள் (ஆளுநர்)வலியுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

