தமிழகத்தில் கன மழைக்கு 6 பேர் பலி: இன்றும் மழை தொடரும்
சென்னை& பெங்களூர்:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த இடியுடன் கூடிய கனத்த மழைக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது. குறிப்பாக மதுரை, தேனிமாவட்டங்களில் பலத்த இடியுடன், கன மழை பெய்தது. இதனால் மதுரை நகரில் மழை நீர் வெள்ளம் போலஓடியது.
கடலூரில் பெய்த கன மழைக்கு 2 பேர் பலியாகினர். அதேபோல வேலூரில் பெய்த கன மழையினால் 2 பேர்இறந்தனர். விழுப்புரம் மாவட்டம் ஏரியூரில் பெய்த பேய் மழைக்கு 2 பேர் பலியாயினர்.
கோவை நகரில் பெய்த கன மழை காரணமாக நகரில் வெள்ளம் ஓடியது. கரூரில் 6 மணி நேரத்திற்கு மழைகொட்டோ கொட்டென்று கொட்டியது. கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழைபெய்தது.
சென்னை நகரில் நேற்று காலை லேசான மழை இருந்தது. ஆனால் பிற்பகலுக்கு மேல் வெயில் கொளுத்தத்தொடங்கியது.
பெங்களூரிலும் நேற்று பெய்த கன மழைக்கு தமிழ்த் தம்பதியான சந்திரகாந்தா, பிரகாஷ் ஆகியோர் பலியாயினர்.வெள்ள நீர் ஓடியபோது, பெரிய கால்வாயில் விழுந்த தனது மனைவி சந்திரகாந்தாவைக் காப்பாற்றச் சென்றார்பிரகாஷ். அப்போது இருவருமே நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஸ்ரீராமாபுரம் பகுதியில் இச் சம்பவம் நடந்தது.இவர்கள் தமிழகத்தின் வாலஜா பகுதிச்ை சேர்ந்தவர்கள்.

