ஜெயலலிதாவின் பேச்சு தமிழக அரசியலுக்கே களங்கம்: கருணாநிதி
சென்னை:
காவிரிப் பிரச்சனையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் மீது ஜெயலலிதா புகார்கூறுவது புதிதல்ல, எப்போதும் வழக்கமாக பாடும் பல்லவிதான் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாகப்பட்டனத்தில் நடந்த அரசு விழாவில் தொகுதிஎம்.பியை மேடையில் வைத்துக் கொண்டு அவரை சவாலுக்கு இழுத்து ஜெயலலிதா பேசியிருப்பது தமிழகஅரசியலுக்கு ஏற்பட்ட களங்கம்.
அத்தோடு நில்லாமல், அவரது காரை காரைக்கால் வரை துரத்திச் சென்று தாக்கியதும், மிகக் கடுமையானகண்டனத்துக்குரியது.
காவிரி நீர்ப் பிரச்சினையில் மத்திய அரசில் உள்ள திமுக அமைச்சர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று ஜெயலலிதாகூறியிருப்பது புதிய புகாரல்ல, வழக்கமாக அவர் பாடும் பல்லவிதான்.
இவர் (ஜெயலலிதா) ஆட்சியில் இருப்பாராம், எதிர்க் கட்சிகள் போய் கர்நாடகத்திடம் தண்ணீர் வாங்கிக் கொண்டுவந்து தர வேண்டுமாம். ஜெயலலிதாவுக்கு இது போன்ற பேச்சு புதிதல்ல. அவரைத் திருத்தவும் முடியாது என்றார்.
அரசு விழாக்களுக்கு திமுக எம்.எல்.ஏ, எம்.பிக்களை தமிழக அரசு அழைப்பதில்லையே என்று ஒரு நிருபர்கேட்டபோது, அது தான் நாகப்பட்டிணத்தில் எதிர்க் கட்சி எம்.பியான மணிசங்கர அய்யரை அழைத்துகவனித்தார்களே. அது போதாதா?. யாரையாவது இவர்கள் கூப்பிட்டால் ஆபத்து என்று அர்த்தம் என்றார்கருணாநிதி.
இதற்கிடையே அய்யர் மீதான தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுவும்கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டியது அரசின் கடமை என்று அவர்கூறியுள்ளார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications