பண்ணையாரின் எண்கெளன்டர் சாவு: 1 கோடி தந்தி இயக்கம் நடத்த நாடார்கள் முடிவு
சென்னை:
வெங்கடேச பண்ணையார் சாவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மத்திய அரசுக்கு ஒரு கோடி தந்திகள்அனுப்புவது என நடந்த நாடார்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பண்ணையார் சாவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று சென்னையில் கூட்டம் நிடந்தது. சென்னை வாழ் நெல்லை,தூத்துக்குடி நாடார்கள் அமைப்பு இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கூட்டத்தில் திமுக ன்னாள் அமைச்சர்கள் ஆலடி அருணா, சற்குண பாண்டியன், காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன், அகில இந்திய செயலாளர் ஜி.கே.வாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசியவர்கள், பண்ணையார் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் அவரை போலீஸார்சுட்டுக் கொன்றது சட்ட விரோதமான செயலாகும். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு நாடார் சமுதாயத்தினர் ஒரு கோடி தந்திகளை அனுப்புவர்என்றனர்.
கூட்டம் நடந்த தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர்.
ராமதாஸ் கோரிக்கை
இதற்கிடையே வெங்கடேச பண்ணையார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைநடத்த உத்தரவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பண்ணையார் மீது புகார் கொடுத்த சமீர் என்பவர் தற்போது இந்தியாவிலேயே இல்லை என்று கூறப்படுகிறது.எனவே இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதில் தவறே இல்லை என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications