பாலியல் வன்முறை: மருமகளிடம் சமாதானம் பேச மறுத்த துணைவேந்தருக்கு நீதிமன்றம் கண்டனம்
சென்னை:
நீதிமன்றம் கூறியபடி, மருமகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்ததாதற்கு பெரியார் பல்கலைக்கழகதுணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீதுஅவரது மருமகள் சங்கீதா புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து குடும்பத்தோடு முன் ஜாமீன் கோரி சேதுபதிராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அந்த மனுவை நீதிபதி கற்பக விநாயகம் விசாரித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தவிசாரணையின்போது, துணைவேந்தரையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக சாடிய நீதிபதி, 2நாட்களுக்குள் சங்கீதாவை சமாதானம் செய்யுமாறு பணித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது பல முறை முயன்றும் சங்கீதாவுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று சேதுபதி ராமலிங்கம் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி கற்பகவிநாயகம் கடும்கோபமடைந்தார்.
நல்ல மனதுடன் முயன்றிருந்தால் நிச்சயம் சங்கீதாவுடன் பேசியிருக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டுள்ள உங்களதுமகன் அமெக்காவில் இருந்தபடி இந்த வழக்கை கையாளுகிறார்.
இதிலிருந்தே சங்கீதா மீது உங்கள் குடும்பத்திற்கு எந்தவித அக்கறையும் இல்லை என்று தெரியவருகிறது.சங்கீதாவின் திருமண வாழ்க்கையில், நீதிமன்றம் மிகுந்த அக்கறை காட்டுகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட சேதுபதிராமலிங்கத்தின் வழக்கறிஞர் இந்த மனுவை ஓபன் கோர்ட்டில் விசாரிக்காமல்ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிற்பகலில் தனது அறையில் விசாரணை தொடரும் என்றார்.-
-
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications