கஞ்சா வழக்கு: ஜனனிக்கு 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை நகல்
மதுரை:
ஜனனி உள்ளிட்ட 3 பேருக்கு 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படவுள்ளது.
கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மதுரை இளம் பெண் ஜனனி, அவரது தாயார்மற்றும் அவர்களது ஓட்டுநர் சதீஷ் ஆகிய 3 பேருக்கும் வரும் 20ம் தேதி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும்என்று மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனனி, அவரது தாயார் ரெஜீனா மற்றும் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டு விட்டது. இன்று அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாக இருந்தது.
அவர்கள் கஞ்சா கடத்த துணை போனதாகவும், ஒரு திடீர் சோதனையின் போது அவர்களிடமிருந்து ஒன்றரைகோடி, 10 கிலோ கஞ்சா, 22 சவரன் தங்கம் அகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகைதெரிவிக்கிறது.
ஆனால் இன்று ஜனனியும், சதீஷும் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். ரெஜீனாவுக்கு உடல் நலம்சரியில்லாத காரணத்தால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
இதையடுத்து வரும் 20ம் தேதி 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அன்றைய தினம்குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்றும் நீதிபதி சம்பத் குமார் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஜனனியும், சதீஷும் மீண்டும் திருச்சி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications