பணிந்தார் ஜெயலலிதா: பண்ணாைர் சாவு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவு
சென்னை:
போலீசாரால் வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதி விசாரணைக்கு தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
நாடார் சமூக மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
இந்த சாவுக்கு எதிராக சென்னையில் கூட்டம் நடத்திய நாடார் சமூக பிரமுகர்களை இன்று முதல்வர் ஜெயலலிதாபேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
இதையடுத்து நெல்லை நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவர் பெரியசாமி தலையையில் அந்த சமூகத்தலைவர்கள் 18 பேர் தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
அப்போது இந்த சாவு குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துமாறும்,சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த என்ளெண்டர் கொலைக்குக்காரணமான சென்னை போலீஸ் கமிஷ்னர் விஜய்குமாரை நீக்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்தச் சந்திப்புக்குப் பின் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த மாதம் 26ம் தேதி கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவான வழக்குத் தொடர்பாக அபார்ட்மென்டில் ஒருகுற்றவாளியைக் கைது செய்யச் சென்றபோது, தற்காப்புக்காக சுட வேண்டிய கட்டாய சூழ்நிலையில் வெங்கடேசபண்ணையார் போலீஸ் துப்பாக்கி குண்டுக்கு பழியானதாக சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.
வெங்கடேச பண்ணையார் மீது 6 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 12 கிரிமினல்வழக்குகள் உள்ளதாகவும் கமிஷ்னர் கூறியுள்ளார். மேலும் பயங்கர ஆயுதங்களுடன் பண்ணையாரும் அவரதுகூட்டாளிகளும் வன் பறிப்புகளிலும் ஈடுபட்டிருந்தனர்
இதில் துப்பு கிடைத்தால் தான் மகாலட்சுமி அபார்ட்மெண்டிக்கு போலீசார் சென்றனர். அவர்களைக் கைது செய்யமுயன்றனர். ஆனால், போலீசாரை கொல்வேன் என மிரட்டிய பண்ணையார் , சப் இன்ஸ்பெக்டர் அருள் மணியைநோக்கி சுட்டார். இதில் மணி காயமடைந்தார். தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில் பண்ணையார் உடலில் குண்டுபாய்ந்தது.
இந் நிலையி பண்ணையாரின் என்கெளண்டர் சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நாடார் சமுதாயதலைவர்கள் என்னைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதை ஏற்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவாக விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு இந்த கமிஷனுக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்கெளண்டர் நடத்த வேண்டிய நிலை ஏன் வந்தது, பண்ணையார் ஏன் கொல்லப்பட்டார் என்பது குறித்து இந்தக்கமிஷன் விரிவான விசாரணை நடத்தும்.
எனது அரசு தனி மனித உரிமையை மதித்தே வந்துள்ளது. மேலும் சட்டத்தை நிலை நாட்டுவதிலும் தீவிரமாகஉள்ளது. மனித உரிமைகள் மீறப்பட்டால் அதை இந்த அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தும்.
இவ்வாறு ஜெயலலிதாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிடாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடவும், இந்த வழக்கு செலவுகளுக்காக ரூ. 1கோடி திரட்டவும் நாடார் இன பிரமுகர்கள் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஆளுநர் தொடர்புடைய ஒரு நிதி நிறுவன விவகாரத்தில் தலையிட்டதால் தான் பண்ணையாரை கமிஷ்னர்விஜய்குமார் சுட்டுத் தள்ள ஆணையிட்டதாக நாடார் சமூகத்தினர் கூறுகின்றனர்.
மாஜி ஆளுநரைப் போலவே மலையாளியான விஜய்குமார் தனது மொழிப் பாசத்தால் பண்ணையாரைகொன்றுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த எண்கெளன்டருக்கு தோட்டத்து முக்கிய பெண் புள்ளி தான் பின்னணியில் இருந்தார் என்று அமைச்சர் ஒருவர்நாடார் சமூகத் தலைவர்களிடம் கூறி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. பாத்திமா பீவியுடன் இந்த பெண்புள்ளியின் ஆட்களுக்கும் அந்த நிதி நிறுவனத்தில் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர அந்த புள்ளி தரப்புக்கு ஒரு காலத்தில் வேணடப்பட்டவாராக இருந்த பண்ணையார் அவர்களுடனேயேமோத ஆரம்பித்ததும் இந்த என்கெளண்டருக்குக் காரணம் என்கின்றனர்












Click it and Unblock the Notifications