வைகோவுக்கு எதிரான முக்கிய சாட்சியான மதுரை எஸ்.ஐக்கு கட்டாய ஓய்வு
சென்னை:
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வழக்கறிஞரை தரக்குறைவாகபேசியதால் மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மதுரை திருமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்சென்னகேசவனுக்கு அரசு கட்டாய ஓய்வு (compulsory retirement) கொடுத்துள்ளது.
மதுரை, திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோஉள்ளிட்ட மதிமுகவினர் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பின் 2-வது முக்கிய சாட்சியாக திருமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்சென்னகேசவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணையின்போது, சாட்சியம் அளிக்க வந்த சென்னகேசவன், நீதிமன்றத்திலேயே வைகோவின்வழக்கறிஞரை மிகத் தரக் குறைவாகத் திட்டினார்,
இதையடுத்து வைகோவின் வழக்கறிஞர் நீதிபதி ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து வைகோவின் வழக்கறிஞரிடம் மன்னிப்பு கேட்குமாறு சென்னகேசவனுக்கு நீதிபதிஉத்தரவிட்டார். இதனால் அவரிடமும், நீதிபதியிடமும் மன்னிப்பு கேட்டார் சென்னசேகவன்.
இந் நிலையில் சப் இன்ஸ்பெக்டர் சென்னகேசவனுக்கு தமிழக அரசு திடீரென கட்டாய பணி ஓய்வு கொடுத்துவீட்டுக்கு அனுப்பியுள்ளது. நேற்று முன் தினம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வைகோ வழக்கில் இவர் அவருக்கு எதிராக தீவிரமாக சாட்சி சொல்லவில்லை என்ற காரணத்தினாலேயே அவர்தூக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications