தமிழக ஆளுநருக்கு ஜனாதிபதி கலாம் காட்டமான கடிதம்
டெல்லி:
அடிக்கடி சொந்த வேலையாக ஊரை விட்டு ஓடிவிடும் தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவுக்கு ஜனாதிபதி அப்துல்கலாமிடம் இருந்து காட்டமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் புதிய அரசியல் நண்பராகியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சிபாரிசுடன்தமிழக ஆளுனர் ஆனவர் ராம்மோகன் ராவ்.
அடிக்கடி தனது சொந்த ஊரான ஹைதராபாத்துக்குச் சென்று விடுகிறார். இது தவிர ஊட்டி உள்ளிட்ட கோடை வாசஸ்தலங்களில் பெரும்பாலான நேரம் பொழுது போக்கி வருகிறார்.
இந் நிலையில் சமீபத்தில் நாகப்பட்டிணத்தில் அதிமுகவினரால் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர்அது தொடர்பாக புகார் மனு அளிக்க ராம்மோகன் ராவிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருந்தார்.
இதையடுத்து அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அய்யரும் காங்கிரஸ் தலைவர்களும் புகார் கொடுக்கச்சென்றபோது ஆளுநர் மாளிகையில் ராம்மோகன் ராவ் இல்லை. அவரது அலுவலக செயலாளர் கூட இல்லை.இதைடுத்து அவரது உதவியாளரிடம் மனு கொடுத்துவிட்டுத் திரும்பினார் அய்யர்.
இது குறித்து ஜனாதிபதி கலாமுக்கு அய்யர் புகார் அனுப்பினார். தனக்கு நேரம் ஒதுக்கித் தந்துவிட்டு ராம்மோகன்ராவ் கவர்னர் மாளிகையை விட்டுச் சென்றுவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ராவுக்கு ஒரு காட்டமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,நீங்கள் சொந்த வேலையாக அடிக்கடி வெளியூர் பயணம் போய் விடுகிறீர்கள். சமீபத்தில் சொந்த வேலைக்காகஊட்டிக்குச் சென்று பல நாட்கள் தங்கியிருந்தீர்கள்.
எம்.பியான மணிசங்கர அய்யருக்கு அப்பாயிண்மென்ட் வழங்கிவிட்டு நீங்கள் அவரை சந்திக்கவில்லை. அவர்வந்தபோது நீங்கள் வெளியூர் போய் விட்டீர்கள். உங்கள் செயலாளரையாவது கவர்னர் மாளிகையில் தங்கிஇருக்கச் செய்யலாம். மணி வந்தபோது அவரும் கூட இல்லை.
எனவே, நாட்டின் நலன் கருதி அடிக்கடி வெளியூர் செல்வதைத் தவிருங்கள்.
இவ்வாறு கடுமையான கடிதம் ராம்மோகனுக்கு வந்துள்ளது. மணிசங்கர அய்யர் புகார் கொடுக்க வந்தபோதுவேண்டுமென்றே அவர் வெளியூர் போய்விட்டதாக காங்கிரசார் கூறுகின்றனர். முதல்வருக்கு ஆதரவாக அவர்செயல்படுவதாக ஏற்கனவே எதிர்க் கட்சிகளின் விமர்சனத்துக்கு ராம்மோகன் உள்ளாகியுள்ளார்.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications