மழையை வென்ற கிரிக்கெட்
சென்னை:
மழை காரணமாக நடக்குமா, இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்த இந்திய, நியூசிலாந்து அணிகளுக்குஇடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர்இன்று சென்னையில் தொடங்கியது. இன்று நடக்கும் முதல் போட்டியில், இந்தியாவும், நியூசிலாந்தும்மோதுகின்றன.
பகல் இரவுப் போட்டியாக நடக்கும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது.
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக கிரிக்கெட் போட்டி நடக்குமா என்றசந்தேகம் எழுந்தது. ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. மைதானத்தின் பிற பகுதிகளும் கூட மூடப்பட்டன.
மைதானத்தில் தேங்கும் நீர், ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்வாப்பர் கருவி மூலம்அகற்றப்பட்டது. இருப்பினும், நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மறுபடியும் மைதானம்தெப்பமாகிவிட்டது. இதையடுத்து தொடர்ந்து நீர் அகற்றும் பணி நடந்தது.
மழை இல்லாத காரணத்தால் ஆட்டம் தொடங்கியது. அதே நேரத்தில் மேகமூட்டம் நிலவுகிறது. எப்போதுவேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலையில் இன்றைய ஆட்டம் நடந்து வருகிறது.
ஆட்டத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில்திரண்டுள்ளனர். தீபாவளியைக் கூடப் பொருட்படுத்தாமல் பல ரசிகர்கள் வெளியூர்களிலிருந்து இங்கு வந்திருப்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தியா ஜெயித்தால் அதுதான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என்று அவர்கள்கூறுகிறார்கள்.
மழை வராமல் இருக்க வேண்டும், ஆட்டத்தில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்பதே சேப்பாக்கத்தில்குழுமியிருக்கும் ரசிகர்களின் தாரக மந்திரமாக உள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications