பண்ணையார் சாவை விசாரிக்கும் நீதிபதியின் மருமகன் சுடப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள கமிஷனின் தலைவர்நீதிபதி ராமனின் மருமகனை அடையாள தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர்படுகாயமடைந்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையார் சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுநாடார் சமுதாயத்தினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பண்ணையார் சாவு குறித்துவிசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமன் தலைமையிலான கமிஷனை முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.

இந் நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் நீதிபதி ராமனின் மருமகன் வெங்கடேசனை அடையாளம் தெரியாதநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

நேற்று இரவு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் வெங்கடேசன். அப்போது வீட்டுக்கு வெளியே மோட்டர்சைக்களில் இருவர் வந்தனர். வந்தவர்களில் ஒருவன் வீட்டுக் கதவைத் தட்டினான். இதையடுததுே வெங்கடேசன்திறந்து யார் என்று கேட்பதற்குள், அந்த மர்ம ஆசாமி தன்னிடமிருந்த துப்பாக்கியால் வெங்கடேசனை சுட்டான்.

இதில் இடுப்புப் பகுதியில் வெங்கடேசனுக்கு குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்தார் வெங்கடேசன்அலறினார்.

இதையடுத்து அந்த நபர் தப்பியோடி தயாராக நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிவிட்டான்.

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. குண்டைவெளியே எடுக்க அறுவை சிகிச்சையும் நடந்தது. குண்டு எடுக்கப்பட்டுவிட்டாலும் அவர் தொடர்ந்து தீவிரஅறுவை சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்தவுடன் திருச்சி நகர போலீஸ் கமிஷ்னர் சுனில் குமார் சிங் தலைமையில் மூத்த அதிகாரிகள்வெங்கடேசனின் வீட்டுக்கு விரைந்தனர். சுட்டவர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமா?:

இதற்கிடையே வெங்கடேசன் யாரால் சுடப்பட்டார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முதலில், வெங்கடேச பண்ணையாரின் கூட்டாளிகளால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீஸார் கூறினர்.வழக்கை தங்களுக்கு ஆதரவாகவே நடத்திச் செல்ல வேண்டும் என்று நீதிபதிக்கு எச்சரிக்கை தரும் விதத்திலேயேஇந்த துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாகக் கூறினர்.

ஆனால், பண்ணையாரின் எதிரிகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தி விசாரணையை அவருக்கு எதிராகத் திருப்பமுயற்சிப்பதாக ஒரு தரப்பினர் கூறினர்.

ஆனால், தற்போது இதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக திருச்சி காவல்துறை கமிஷ்னர் சுனில்குமார் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், துப்பாக்கியால் சுட்ட நபர் பணம் எங்கே உள்ளது என்று கேட்டுசுட்டதாக வெங்கடேசன் கூறுகிறார்.

ஆனால், அப்படி அவன் கேட்கவில்லை என்று வெங்கடேசனின் தாயாரும், மனைவியும் கூறுகிறார்கள்.

மேலும், வெங்கடேசன் வீட்டில் அந்த அளவுக்குப் பணம் அப்போது இல்லை. எனவே இதில் முரண்பாடுநிலவுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்றும்விசாரணை செய்து வருகிறோம் என்றார்.

வெங்கடேசனைச் சுட்ட நபர், அவரைக் கொன்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளான். அதனால்தான் தலையிலோ, மார்பிலோ சுடாமல் இடுப்புப் பகுதியில் சுட்டுள்ளான் என்கிறது போலீஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+