புதிய தலைமைச் செயலகம்: பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கான பூமி பூஜைபணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு விட்டது. தலைமைச் செயலகத்தைவடிவமைப்பதற்கான உரிமையும் சென்னையைச் சேர்ந்த என்ஜினியரிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தமிழகத்தில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்களுக்கு பூமி பூஜை எல்லாம் நடத்தப்படுவது இல்லை.அடிக்கல் நாட்டு விழா நடக்கும். அதைத் தொடர்ந்து நேரடியாக கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும்.
ஆனால், பூஜை நடத்திய பின்னரே கட்டுமானப் பணிகளைத் தொடங்குவது என்று தீவிரமாக உள்ளார் முதல்வர்ஜெயலலிதா. தனது ஆஸ்தான ஜோதிடர் குறித்துக் கொடுத்தபடி வரும் 30ம் தேதி காலை 8 மணிக்கு பூமி பூஜைநடத்தவுள்ளார் ஜெயலலிதா.
இந்த பூஜைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் காஞ்சி சங்கராச்சாரியாரையும் பங்கேற்கச்செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
ஏற்கனவே மண் பரிசோதனை முடிந்து விட்ட நலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ள பகுதியில்தரையை புல்டோசர்கள் மூலம் சமப்படுத்தும் பணிகளும் முடிந்துவிட்டன.
தற்போது அங்கு பூஜைக்காக பந்தல் போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள அண்ணா பல்கலைக்கழகம் அருகே உள்ள சர்தார்படேல் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள்இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
போக்குவரத்தை வேறு பாதைக்குத் திருப்புவது, கன ரக வாகனங்களைத் தடை செய்வது போன்றவை குறித்துஆலோசனைகள் நடத்தினர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications