சென்னையில் தமிழிசை விழா: ராமதாஸ் ஏற்பாடு
சென்னை:
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் டிசம்பர் 17, 18ம் தேதிகளில் சென்னையில் தமிழ் இசைப்பெருவிழா நடைபெறுகிறது.
இது தொடர்பாக அறக்கட்டளையின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:
தமிழிசையை வளர்க்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்படுகிறது. டிசம்பர் 17ம் தேதி காலையில் தமிழிசைஆய்வரங்கமும், இசையரங்கமும் நடைபெறும், காரைக்கால் அம்மையார் பாடிய திருமுறைப் பாடல்கள், மூவர்தேவாரம், திருவாசகம் முதலியவை பாடப்படும்.
பிற்பகலில் சங்கத் தமிழ் நூல்களில் உள்ள இசை வடிவங்கள், தாயுமானவர் பாடல்கள், ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தம், வள்ளலார் பாடல்கள், சீர்காழி தமிழிசை மூவர் பாடல்கள் குறித்த இசையரங்கமும், கருத்தரங்கமும்நடைபெறும்.
18ம் தேதி சித்தர் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், குணங்குடி மஸ்தான் மெய்ஞ்ஞானகீர்த்தனைகள், வேதநாயகம் பிள்ளை சமரசக் கீர்த்தனைகள், காவடிச் சிந்து, பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்இடம்பெறும்.
தமிழிசைக் கருவிகளை மீட்டும் கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்படும் என்றார்.
பெங்களூர் தமிழ் சங்க பொங்கல் விழா:
ஜனவரி 15 தேதி முதல் 24ம் தேதி வரை பெங்களுர் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது.
இதனையொட்டி ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மி, கோலாட்டம், குறவஞ்சி உள்ளிட்ட நாடகங்கள்,சிலம்பம்,கோலப்போட்டி, மாறுவேடப்போட்டி, மெல்லிசைப் போட்டி ஆகியவை நடைபெறும்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படவுள்ளதாக தமிழ்ச் சங்கத் தலைவர்க.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications