விரைவில் டான்சி தீர்ப்பு?: போயஸ் கார்டன் கலக்கம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் விரைவில் தீர்ப்பை வெளியிடச் செய்ய முயற்சிகள்தொடங்கியுள்ளன.
டான்சி வழக்கு விசாரணை முடிந்து ஓராண்டாகிவிட்ட நிலையில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என். காரேவை, மத்திய அரசின் தலைமைவழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி சந்தித்துப் பேசியுள்ளார்.
டான்சி நிலத்தை ஜெயலலிதாவும் சசிகலாவும் சுருட்டியது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிராஜேந்திர பிரசாத், நீதிபதி வெங்கட்ராமரெட்டி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இதில்விசாரணை கடந்த ஆண்டே முடிந்துவிட்டது.
ஆனால், ஓராண்டாகியும் தீர்ப்பு வெளியாகவில்லை. இந்திய வரலாற்றிலேயே இது போல தீர்ப்பு ஓராண்டுக்கும்மேலாக ஒத்தி வைக்கப்பட்டதே இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம்உறுதி செய்தால், முதல்வர் பதவியை விட்டு ஜெயலலிதா விலக வேண்டி வரும். அடுத்த 6 ஆண்டுகளுக்குதேர்தலில் போட்டியிடவும் முடியாது என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் சமீப காலமாக வட இந்தியப் பத்திரிக்கைகளும், உலகப் புகழ் பெற்ற கார்டியன் பத்திரிக்கையும் கூடஇந்த வழக்குக் குறித்து செய்திகள் வெளியிட ஆரம்பித்துள்ளன. நீதி முடங்கிக் கிடப்பதாக செய்திகள் வரஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் தலைமை நீதிபதி காரேயை, அட்டர்னி ஜெனரல் சந்தித்து இது குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.இது ஒரு மோசமான முன் உதாரணம் ஆகிவிடும் என்பதால் தீர்ப்பை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறுகோரியதாதத் தெரிகிறது.
இதனால் விரைவில் தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த விவரங்கள் தெரிய வந்ததால், போயஸ் தோட்டத்திலும் அதை எதிர்கொள்ள சில நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வேணுகோபால்ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி விரைந்துள்ளார்.
தீர்ப்பு பாதகமாக இருந்தால் உடனே உச்ச நீதிமன்றத்திலேயே அப்பீல் செய்யவும் முடிவு செய்துள்ளது அதிமுகதலைமை.
ஜெயலலிதா பதவி இழக்க நேரிட்டால், உடலில் ஊனமுள்ள ஒருவரையே முதல்வராக்க வேண்டும் என்றுமுதல்வரின் ஆஸ்தான ஜோதிடர் அவருக்கு பரிகாரம் சொல்லி இருப்பதாக முன்பு தகவல்கள் வந்தன. இதனால்அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் வேலையும் போயஸ் தோட்டத்தில் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications