எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை கோருகிறது இந்து முன்னணி
சேலம்:
சேலத்தில் நரிக்குறவர்களை மதமாற்றம் செய்ததற்காக, சென்னை பிஷப் எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவடம் இந்து முன்னணி அமைப்பு மனு கொடுத்துள்ளது.
ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்த பிறகு இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் வெள்ளையப்பன்செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம், பஞ்சமதங்கம் ஏரிப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்குஆக்கிரமித்து குடிசை போட்டிருந்த 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்களது வீடுகளை இழந்தனர்.இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பலரும் உதவிகள் செய்தனர்.
ஆனால் சென்னையைச் சேர்ந்த பிஷப் எஸ்ரா சற்குணம், தனது இவாஞ்சலிகல் சர்ச் என்றஅமைப்பின் மூலம்,நரிக்குறவர்களை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்து, மூளைச் சலவை செய்து,கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியுள்ளார்.
நரிக்குறவர்கள், ஏரிப் பகுதியை ஆக்கிரமித்துத் தங்கியிருந்தவர்கள். அவர்களுக்கு உதவுவதாக கூறி கட்டாயமதமாற்றம் செய்துள்ளனர். எனவே எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார் வெள்ளையப்பன்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications