ஜெ. ஆதரவு போஸ்டர்: காங். எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை- சோ.பா அறிவிப்பு
மதுரை:
முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று போஸ்டர் அடித்ததாக கூறி விளக்கம் கேட்கப்பட்ட இரண்டு காங்கிரஸ்எம்.எல்.ஏக்களும், பத்திரிக்கைகள் வாயிலாக அளித்த விளக்கத்தை ஏற்று இருவர் மீதும் நடவடிக்கைஎடுக்கப்படுவது கைவிடப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தஞ்சை சென்ற முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று பாபநாசம் ராம்குமார், பேராவூரணி திருஞானசம்பந்தம்ஆகிய இரு எம்.எல்.ஏக்களும் போஸ்டர்கள் ஒட்டியதாகக் கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டுசோ.பாலகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இது காங்கிரஸ் கோஷ்டி மோதலை தூண்டி விட்டு விட்டது. கடந்த சில நாட்களாக வாசன், இளங்கோவன்,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் மாறி, மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பும் வழியில் மதுரையில்செய்தியாளர்களிடம் சோ.பா. பேசுகையில், சம்பந்தப்பட்ட 2 எம்.எல்.ஏக்களும் பத்திரிக்கைகள் வாயிலாகவிளக்கம் அளித்துள்ளனர். அதில், அவர்களாக போஸ்டர்கள் ஒட்டவில்லை, ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில்தான்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் மீது இனி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. இருப்பினும்,இவர்களது புகைப்படத்தை போஸ்டர்களில் போட யார் காரணம் என்பதை கண்டறியும் கடமை இருஎம்.எல்.ஏக்களுக்கும் உண்டு என்றார் அவர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications