மதுரையில் விடுதலை சிறுத்தைகள் பந்த்: பஸ்கள் உடைப்பு
மதுரை:
பாப்பாபட்டி உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்தக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் மற்றும்மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சார்பில் மதுரையில் இன்று பந்த் மற்றும் சாலை மறியல் போராட்டம்நடந்தது. இதில் 3 அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.
பாப்பாபட்டி உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துக்களில் தேர்தல் என்ற பெயரில் ஜனநாயகப் படுகொலைநடப்பதாகவும், எனவே இந்த பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நிரந்தர தீர்வு காணக்கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இன்று மதுரையில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் சாலை மறியல் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பந்துக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்டாக்டர் சேதுராமனும் ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து மதுரை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டது.
இந்த பந்த்துக்கு மதுரையில் சில இடங்களில் ஆதரவு இருந்தது. புதூர், மகாத்மா காந்தி நகர், முடக்காத்தான்,தல்லாகுளம் ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
தமுக்கம் மைதானம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தச் சென்ற நூற்றுக்கணக்கான விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்டாக்டர் சேதுராமனும் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே புதூர், பொன்மேணி ஆகிய பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் திடீரென வன்முறையில்இறங்கினர். 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து, உடைத்தனர்
முடக்காத்தானில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகளின் நிர்வாகி பாண்டி என்வரின் தம்பிஅப் பகுதியில் தனது ஆட்களுடன் சென்று கடைகளை அடைக்கச் சொல்லி கல் வீசியதால் அங்கு பதற்றம்ஏற்பட்டது. பின்னர் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு ஒரு பஸ் மீதும் இவர்கள் தாககுதல் நடத்தினர்.
பார்வர்ட் பிளாக் எதிர்ப்பு:
இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகளின் இந்த பந்துக்கு பார்வர்ட் பிளாக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சித் தலைவர் சந்தானம் விடுத்த அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின்பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்துள்ள பந்த் தேவையற்றது, நியாயமற்றது. ஒரு பஞ்சாயத்தில், 15சதவீதத்திற்கும் மேலாக தலித்துகள் இருந்தால்தான் அதை தலித் பஞ்சாயத்தாக அறிவிக்க முடியும்.
ஆனால் கொட்டகச்சியேந்தல் கிராமத்தில் உள்ள 1,150 வாக்காளர்களில் 17 பேர் மட்டுமே தலித் வகுப்பைச்சேர்ந்தவர்கள்.
இதேபோல பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய பஞ்சாயத்துக்களில் இதை விட குறைவானஅளவில் தலித்துகள் எண்ணிக்கை இருந்தாலும் கூட அங்கு தேர்தல் நடத்த அரசு சிறப்பான முயற்சிகளைமேற்கொண்டது.
ஆனால் தேவர் மற்றும் தலித் சமுதாயத்தினரிடையேயும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், திருமாவளவன்செயல்பட்டு வருகிறார் என்று கூறியுள்ளார் சந்தானம்.
தேவர் சமுதாயத்தினரின் எதிர்ப்பால் தான் தலித் பஞ்சாயத்துகளில் தேர்தலே நடத்த முடியாத நிலை உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications