தூர்தர்ஷனுக்கு எதிராக வழக்கு
சென்னை:
கிரிக்கெட் வர்ணனைக்காக தூர்தர்ஷன் அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் செய்திகளை நிறுத்துவதற்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சக்தி என்பவர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கிரிக்கெட் போட்டிகளின்போது, தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் பலசெய்தி அறிக்கைகள் ரத்து செய்யப்பட்டு விடுகின்றன.
நேரடி வர்ணனைக்கு வசதியாக இந்த செய்தி அறிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால், தூர்தர்ஷனைமட்டுமே பார்க்கும் வசதி கொண்ட லட்சக்கணக்கான மக்கள் செய்திகளை அறிய முடியாமல் தவிக்கும் நிலைஏற்படுகிறது.
கடந்த 23ம் தேதி சென்னை தூர்தர்ஷன் செய்தி நேரங்களில் தாறுமாறான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.கிரிக்கெட் போட்டியை தடங்கல் இல்லாமல் ஒளிபரப்புவதற்காகவே இந்த மாற்றங்கள்மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தூர்தர்ஷனுக்கு தனியாக விளையாட்டு அலைவரிசை உள்ளது. விளையாட்டுத் தொடர்பான அனைத்தையும்அதிலேயே ஒளிபரப்பலாம். அதை விடுத்து மற்ற நிகழ்ச்சிகள், செய்திகளை ரத்து செய்தது சட்டவிரோதமானதுஎன்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கியபெஞ்ச் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் பிரசார் பாரதி நிறுவனத்திற்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications