திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சந்திக்க தயார்: காளிமுத்து
சென்னை:
திமுக என் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதைச் சந்திக்கத் தயார் என்று சபாநாயகர்காளிமுத்து கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து நடந்த விவாதத்தின் போது திமுகவினர்வெளியேற்றப்பட்டனர். இது குறித்து திமுக மூத்த தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
இலவச மின்சாரம் தொடர்பாக விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய ரூ.49 கோடியில் ரூ.43 கோடியைவிவசாயிகள் மின்கட்டணமாக செலுத்தியதாக கூறுகின்றனர். மீதம் ரூ. 6 கோடி எங்கே? மணி ஆர்டர் செலவுமட்டும் ரூ.5 கோடி ஆனதாக ஜெயலலிதா கூறிய தவறான புள்ளி விவரங்களைக் கண்டித்துப் பேசினோம்.
இதையடுத்து ஜெயலலிதா சொன்ன பதிலைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறினோம். எங்கள்வெளிநடப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய சபாநாயகர், நாங்கள் சொன்ன கருத்து பதிவு செய்யப்படக் கூடாதுஎன்று கூறினார். ஆளுங்கட்சி உறுப்பினராக மாறிப் பேசும் இவரிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து திமுக தலைமையுடன் பேசிய பின் முடிவுஎடுக்கப்படும்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
திமுகவினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சபாநாயகர் காளிமுத்துவிடம் கேட்டபோது, நான் கட்சிசார்பாக நடக்கவில்லை. என் மீது எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஏற்கநான் தயார் என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications