ஜெ. அரசை டிஸ்மிஸ் செய்ய இளங்கோவன் கோரிக்கை
சென்னை:
ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ்செயல் தலைவர் இளங்கோவன் கோரியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதியை கைது செய்து சிறையில்அடைத்துள்ளனர். இதற்கு முன்பு வரை விதிகளை மீறி நடக்கும் உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் கலந்துகொள்ளத் தடை விதித்து சஸ்பெண்ட் செய்வதே வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால் முதல் முறையாக கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவம் இந்திய சட்டமன்ற வரலாற்றிலேயேஇதுதான் முதல் முறை.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து செய்திகளை வெளியிட்டபோது கூடஆங்கிலேயர்கள், இந்து பத்திரிக்கை மீது இவ்வளவு கடுமையான நடவடிக்கையை எடுத்ததில்லை. ஆனால்ஆங்கிலேயர்களை விட தனது ஆட்சி கொடுமையானது என்பதை ஜெ. ஆட்சி நிரூபித்து விட்டது.
இந்த அரசு இனியும் நீடிக்கக் கூடாது. உடனடியாக பிரதமர் வாஜ்பாய் இதில் தலையிட்டு அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன் கூறுகையில், சட்டசபை உறுப்பினர் மீது இவ்வளவுகடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டியதில்லை. நேரடியாக அழைத்து விசாரித்திருக்கலாம்.அதேபோல, பாரம்பரியம் மிக்க இந்து பத்திரிக்கை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது கைது நடவடிக்கை என்பதுஏற்றுக் கொள்ளவே முடியாத செயலாகும் என்றார்.
பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், ஜனநாயக வரலாற்றில் நீங்காத கருப்புப்புள்ளியாக இது இருக்கும் என்றார்.
மதிமுக பொருளாளர் கண்ணப்பன் கூறுகையில், ஜனநாயகம், தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் இந்தசெயல்பாடுகள் தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றார்.
பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,தமிழகத்தின் அடித்தளத்தையே இந்த செயல் அசைத்து விடும்என்று கூறப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறுகையில், தவறுகளை திருத்திக் கொள்வதே மனித இயல்பு.ஆனால் நடப்பதைப் பார்க்கும்போது மேலும் மேலும் தவறுகளையே செய்து வருகிறார்கள் என்றார்.
அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுவும் இதை வன்மையாகக்கண்டித்துள்ளார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறுகையில், பத்திரிக்கையில் வரும் செய்திகளை அறிக்கைகள்மூலம் மறுக்கலாம். அதைவிட்டுவிட்டு திராவிடக் கட்சிகளில் நிலவும் அடிமைத்தனத்தை பத்திரிக்கைகள் மீதும்திணிக்க அரசு முயல்வது தவறு என்றார்.
அதே போல இந்து மீதான நடவடிக்கையை எதிர்த்து மாநிலம் முழுவதும் தர்ணா நடத்தப்படும் என பா.ஜ.க.எம்.எல்.ஏவும் தீவிர ஜெயலலிதா ஆதரவாளருமான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்து மற்றும் முரசொலி மீதான நடவடிக்கைகளை சபாநாயகரும் மாநில அரசும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்என பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கோரியுள்ளார். அதே போல அரசியல் சட்ட நிபுணர்கள், ராம்ஜேத்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்கள், இடதுசாரிக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் ஆகியோருக்கும்ஜெயலலிதா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications