வாஜ்பாய்- ராம் ஆலோசனை: பத்திக்கையாளர்கள் நாளை உண்ணாவிரதம்
சென்னை:
இந்து நாளிதழின் மீது ஜெயலலிதா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அப் பத்திரிக்கையின் ஆசிரியர்என்.ராம் பிரதமர் வாஜ்பாயுடன் பேசினார்.
அப்போது தமிழகத்தில் பத்திரிக்கைகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தனதுகோபத்தை வாஜ்பாய் வெளிப்படுத்தினார்.
இந் நிலையில் இந்து மற்றும் முரசொலி பத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய சபாநாயகர் காளிமுத்துஉத்தரவிட்டுள்ளதை கண்டித்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உண்ணாவிரதம் இருக்கபத்திரிக்கையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்து தலைமை ஆசிரியர் என்.ராம், ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, பதிப்பாளர் ரங்கராஜன், தலைமை நிருபர்ஜெயந்த், சிறப்பு நிருபர் ராதா வெங்கடேசன் மற்றும் முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோரைக் கைது செய்யசபாநாயகர் பிறப்பித்துள்ள உத்தரவைக் கண்டித்து சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்கள் கண்டனக்கூட்டத்தை நிடத்தினர்.
சென்னை செய்தியாளர்கள் சங்கம், பத்திரிக்கை ஆசிரியர்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு பத்திக்கையாளர்கள்அமைப்புகள் இதில் கலந்து கொண்டன. துக்ளக் ஆசிரியர் சோ, இந்து ஆசிரியர் என்.ராம் உள்ளிட்ட ஏராளமானபத்திரிக்கையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
சபாநாயகரின் உத்தரவைக் கண்டித்து நாளை சென்னையில் உண்ணாவிரதம் இருப்பது, 12ம் தேதி மனித சங்கிலிபோராட்டம் நடத்துவது, சட்டசபை நடவடிக்கைகளை புறக்கணிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும், சபாநாயகர் காளிமுத்துவை சந்தித்து புகார் மனு அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட சோ கூறுகையில், அதிமுக அரசின் செயல்பாடுகள் மிகவும் அராஜகமாக இருக்கிறது.நிருபர்களின் வீடு புகுந்து மிரட்டுவது, பத்திரிக்கை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைவது ஆகியவை மட்டமானசெயல்கள்.
விநாச காலம் விபரீத புத்தி மாதிரி தான் இந்த அரசின் செயல்பாடுகள் உள்ளன. சட்டமன்ற உரிமைக் குழுவுக்குஎன்ன அதிகாரம் உள்ளது என்பதே இன்னும் இந்த நாட்டில் தீர்மானிக்கப்படவில்லை. அப்படியிருகையில்உரிமைக் குழுவின் பரிந்துரையை வைத்து சபாநாயகர் எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும்?.
இந்தியாவில் உள்ள எல்லா பத்திரிக்கைகளும் இந்துவில் வெளியான அந்த கட்டுரையை வெளியிட வேண்டும்.அப்போது ஜெயலலிதா அரசு என்ன செய்கிறது என்பதைப் பார்ப்போம் எனறார்.
கூட்டத்தில் ஏராளமான செய்தியாளர்கள், பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள், புகைப்படக்காரர்கள் கலந்துகொண்டனர்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications