மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்போம்: பாஜக.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திமுக தலைமையில் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்ள பாரதிய ஜனதாக் கட்சிதயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பரிதி இளம்வழுதி ஏற்கனவே கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரிலிருந்து நீக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டவர். அவருக்கு மீண்டும் தண்டனை கொடுத்து கைதுசெய்தது தவறான செயலாகும்.
இந்து பத்திரிக்கையாளர்களுக்குத் தண்டனை கொடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இதைக்கண்டித்து 12ம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. பாஜகவுக்கு முறையானஅழைப்பு வந்தால் நாங்களும் அதில் பங்கேற்கத் தயாராக உள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications