ஜெ.வுக்குத் தொடர்பில்லை: கூறுகிறார் காளிமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்து மற்றும் முரசொலி பத்திரிக்கையாளர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கிய விவகாரத்தில் முதல்வர்ஜெயலலிதாவுக்குத் தொடர்பில்லை என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.

இந்து மற்றும் முரசொலி பத்திரிக்கையாளர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கிப் பரபரப்பை ஏற்படுத்தியசபாநாயகர் காளிமுத்து, இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் முதல்வருக்குஎந்தவிதத்திலும் தொடர்பு இல்லை. இரண்டு பத்திரிக்கைகளிலும் வந்த செய்திகள் மற்றும் தலையங்கத்தை நானேதான் உரிமைக் குழுவுக்கு அனுப்பினேன். முதல்வர் கூறி நான் அனுப்பவில்லை.

சட்டசபையின் செயல்பாட்டை முடக்கும் அதிகாரம் பத்திரிக்கைகளுக்கு இல்லை. அத்தகைய அதிகாரத்தைஅரசியல் சட்டம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தேவையில்லாத,தனிப்பட்ட முறையிலான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது அவசியமற்றது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான் முதல்வர் யோசனை தெரிவித்தார். உண்மைஇப்படியிருக்க முதல்வர்தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்பது போல பிரசாரம் செய்யப்படுவதுதேவையற்றது.

இந்து பத்திரிக்கையிடமிருந்து பெறப்பட்ட விளக்கத்தைப் பரிசீலித்த பின்னர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ள உரிமைக் குழு, மே 5, 12, அக்டோபர் 1, 14 மற்றும் நவம்பர் 6 ஆகியதேதிகளில் கூடி விவாதித்து, இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

தங்களது நிலையை விளக்குவதற்கு இரு பத்திரிக்கைகளுக்கும் போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டதுஎன்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+