சால்வை அணிவிக்க வேண்டாம்: சோ.பா.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் தலைவர்களுக்கு சால்வை, மாலைகள் அணிவிப்பதை காங்கிரஸ் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்என்று மாநில காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விரைவில் தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து காங்கிரஸ்தொண்டர்கள் கட்சியின் நலனுக்காக செலவழிக்கவே ஆர்வம் காட்ட வேண்டும்.
அதை விடுத்து தலைவர்களுக்கு மாலை அணிவிப்பது, சால்வை அணிவிப்பது ஆகியவற்றிற்காக காசு செலவழித்துபணத்தை வீணடிக்க வேண்டாம்.
ஆகவே எனது சுற்றுப்பயணத்தின்போதோ அல்லது அலுவலகத்தில் என்னை சந்திக்கும் போதோ மாலை, சால்வைஅணிவிப்பதைத் தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications