மதுரை மீனாட்சி அம்மனுக்கு புதிய தங்கக் கிரீடம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மனுக்கு 2 கிலோ எடையில் புதிய தங்கக் கிரீடம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவிலின் செயல் அதிகாரி பாஸ்கரன் கூறுகையில், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் புதிய தங்கக்கிரீடம் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரபல ஆசாரியா ஸ்தபதி பழனி ஆச்சாரி இதனைஉருவாக்கி வருகிறார். 20 நாட்களில் இந்த கிரீடம் தயாராகிவிடும்.
சுந்தரேஸ்வரர் சுவாமியின் திருக்கோல சிலைக்கு புதிய ஹஸ்தமும், ஜெபகூடமும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்என்றார்.












Click it and Unblock the Notifications