ஈரோட்டில் அமைச்சர்- அதிமுக எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் மோதல்: கன்னம் கடிப்பு!
ஈரோடு:
ஈரோடு அதிமுக கிளைக் கழகத்துக்கு நடந்த தேர்தலில் அமைச்சர் பி.சி. ராமசாமியின் ஆதரவாளர்களும்எம்.எல்.ஏ. தென்னரசுவின் ஆதரவாளர்களும் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். கார்கள் உடைக்கப்பட்டன.பெரும் ரத்தக் களறி ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. ஆங்காங்கே அடிதடி, மண்டை உடைப்பு,செருப்பு வீச்சு, ஜாக்கெட் கிழிப்பு என தேர்தல் கலகலப்பாக நடந்து வருகிறது. திமுக உட்கட்சித் தேர்தல் சண்டைதா.கி. கொலையில் முடிந்ததைப் போல அதிமுக தேர்தலிலும் வன்முறை உச்சத்தை எட்டியுள்ளது.
ஈரோட்டில் நகர, ஒன்றிய, பேரூர் கழகங்களுக்கு தேர்தல் நடந்தது. ராணா திருமண மண்டபத்தில் இந்தத் தேர்தல்நடந்தது.
இந்த மண்டபத்துக்கு அருகே உள் காளிங்கராயன் தங்கும் விடுதியில் தனது ஆட்களுடன் உட்கார்ந்து கொண்டஅறநிலையத்துறை அமைச்சர் பி.சி. ராமசாமி, நகரச் செயலாளர்கள் பதவிக்கு தனது ஆட்களை நியமிக்கஆரம்பித்தார். தேர்தல் நடத்தாமலேயே அவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
ஒரு வார்டுக்கு ராமசாமியின் ஆதரவாளர் ஆணடவர் முத்து என்பவரும், தென்னரசு எம்.எல்.ஏவின் ஆதரவாளர்குப்புசாமி என்பவரும் போட்டியிட்டனர்.
இந்தப் பதவியில் தனது ஆளே நியமிக்கப்பட வேண்டும் என இரு தரப்பினரும் முஷ்டியைத் தட்டினர்.இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
அது அடிதடியாக மாறியது. இந்தச் சண்டையில் கார்கள் உடைக்கப்பட்டன. அதிமுகவினர் ஒருவர் அடுத்தவரின்சட்டையைக் கிழித்தனர். ஒருவரது கன்னம் கடிபட்டதில் முகத்தில் ரத்தம் ஒழுகியது. இந்தக் களேபரங்களுக்குஇடையிலும் தேர்தல் நடத்தப்பட்டது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications