ஆளுநர், கருணாநிதியுடன் எஸ்.ஆர்.பி சந்திப்பு: சட்டமன்ற விவகாரம் குறித்து ஆலோசனை
சென்னை:
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், நேற்றிரவு ஆளுநர் ராம்மோகன் ராவைச்சந்தித்து சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரில் அரசு நடந்து கொண்ட விதம் குறித்து புகார் கொடுத்தார். இன்றுகருணாநிதியையும் எஸ்.ஆர்.பி. சந்தித்துப் பேசினார்.
ஆளுநர் மாளிகையில் சுமார் 45 நிமிடம் நடந்த சந்திப்பின்போது இந்து, முரசொலி பத்திரிக்கையாளர்கள், திமுகஎம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி ஆகியோருக்கு சபாநாயகர் காளிமுத்து விதித்த சிறை தண்டனைகள், இந்தத்தண்டனைகளை அறிவித்தபோது சட்டமன்றத்தின் வாயில்களை மூடியது ஆகியவை குறித்து ராம்மோகன் ராவிடம்எஸ்.ஆர்.பி. விளக்கினார்.
மேலும் பரிதியை சட்டமன்ற வளாகத்திலேயே வைத்து போலீசார் அடாவடி செய்ததையும் விளக்கினார். மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்த ஒரு வாரமும் சட்டமன்றத்தில் அரசுத் தரப்பு நடந்து கொண்ட விதம் குறித்துபுகார்களை அடுக்கிய எஸ்.ஆர்.பியிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆளுநர் விவரமாகக் கேட்டறிந்ததாத்தெரிகிறது.
கருணாநிதியுடன் சந்திப்பு:
இந் நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்,சுமார் 30 நிமிடங்கள் தனியே பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆளுநரிடம் தான் பேசியது குறித்துகருணாநிதியிடம் எஸ்.ஆர்.பி. விளக்கியதாகத் தெரிகிறது.
ஒரே குற்றத்துக்காக பரிதிக்கு 3 முறை தண்டனை வழங்க சட்டமன்ற விதிகளில் இடமிருக்கிறதா என்பது குறித்தும்,இந்த விவகாரத்தில் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளதா என்பது குறித்தும் கருணாநிதியும்,எஸ்.ஆர்.பியும் ஆலோசித்தனர்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications